செம நக்கல்யா உனக்கு!.. மீண்டும் விஜய்யை வான்ட்டட்டா வம்புக்கு இழுத்த மீசை ராஜேந்திரன்!..

நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படம், ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்பட வசூலை பீட் செய்யாது என்றும், அப்படி முறியடித்தால் என் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் மீசை ராஜேந்திரன்.

சினிமாவில் போலீஸ் கேரக்டர், அடியாள் கேரக்டர் என சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில், மீண்டும் நடிகர் விஜய்யை டார்கெட் செய்து பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

இதையும் படிங்க: தனுஷை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்தியேன்!.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அயலான் டீம்!

ஏற்கனவே, நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம், ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை தாண்டினால், மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய அளவில் கடந்த ஆண்டு வெளியான அனைத்து திரைப்படங்களுடைய முதல் நாள் வசூலை முறியடித்த லியோ ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலையும் முந்தியது.

ஆனால், அதெல்லாம் பொய் வசூல் கணக்கு என்றும் என்னால் மீசையை எடுக்க முடியாது என அந்தர் பல்டி அடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் 525 கோடி என சன் பிக்சர்ஸ் கடைசியாக அறிவித்தது. அதே போல லியோ படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் 540 கோடிக்கும் மேல் என படக்குழு அறிவித்து நம்பர் ஒன் விஜய் தான் என அறிவித்தது.

இதையும் படிங்க: சிம்பு – தேசிங்கு பெரியசாமி படம் டிராப் ஆகிறதா?!.. என்னப்பா சொல்றீங்க?!.. நடப்பது என்ன?..

இந்நிலையில், தற்போது அளித்த பேட்டியில் மீசை ராஜேந்திரன், நான் இன்னும் மீசையை எடுக்கல, ஆனால், இப்போ யாரு மீசையை எடுத்திருக்கா பாருங்க என கோட் படத்துக்காக மகன் கதாபாத்திரத்தில் நடிக்க மீசையை எடுத்த விஜய்யை மீண்டும் சீண்டியிருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

 

Related Articles

Next Story