‘கடைசி உலகப் போர்’ படத்துக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ள புது படம் தான் ‘மீசைய முறுக்கு 2’. இப்படம் நேற்று (செப்டம்பர் 25-ஆம் தேதி) தான் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.
இதில் ஹீரோவாக நடித்ததுடன், இசையமைத்து, படத்தை இயக்கவும் செய்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. இந்த படத்தில் கெட்டிகா ஷர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.
மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஹர்ஷத் கான், எஸ்.மணிகண்டன், கருணாஸ், யோகி பாபு, பாபா பாஸ்கர், விஜய் வரதராஜ், நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் ஹிப்ஹாப் தமிழா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.3.85 கோடி என்று தகவல் கிடைத்திருக்கிறது.







