Cinema News
மெகா ஐடி ரெய்டு.. 200 கோடி கண்டுபிடிப்பு… விழிபிதுங்கி நிற்கும் தமிழ் சினிமா… சிக்கிக்கொண்டதன் பின்னணி…
சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரி சோதனை செய்தனர். இதில் இதுவரை கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரையில் 30 இடங்களிலும் சென்னையில் 10 இடங்களிலும், சோதனை நடைபெற்றது. இவரை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் கலைபுலி தானு ஞானவேல் ராஜா , எஸ் ஆர் பிரபு ஆகியோர்களின் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.
இதில் அன்பு செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 26 கோடி ரொக்கம் மற்றும் 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்களேன்- அடுத்தடுத்த பெரிய படங்கள்.. ஒரே மாசத்தில் 80 கோடி சம்பளம்.! மச்சக்கார மக்கள் செல்வன்.!
தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்கும் இடத்தரகர்கள் உபயோகிக்கும் whatsapp செயலி மூலம் தான் இந்த பண பரிவர்த்தனை விவரங்கள் வருமானவரித்துறைக்கு சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.
அந்த whatsapp செய்தி பரிமாற்றங்களை ட்ராக் செய்து அதன் மூலம் யார் யாருக்கு பணம் சென்றுள்ளது என்பதை வருமானத்துறை அதிகாரிகள் அறிந்துகொண்டு அதன் பின்னால் தான் இந்த சோதனையை இவ்வளவு பெரியதாக நடத்தினார்கள் இதற்காக டெல்லியில் இருந்து சுமார் 300-க்கும் அதிகமான அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.