அடுத்த கனவுக்கன்னியும் போச்சா… இளசுகளின் மனசை உடைத்த மேகா ஆகாஷ்…
Megha Akash: சமீபத்தில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்த மிக ஆகாஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.
தமிழில் வெளியான ஒரு பக்க கதை படம் மூலம் நடிக்க வந்தவர் மேகா ஆகாஷ். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதைத்தொடர்ந்து தன்னுடைய கவனத்தை தெலுங்கு சினிமா பக்கமும் திருப்பினார். மேகாவிற்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால் அவரே தனக்கு டப்பிங் பேசிக் கொண்டார்.
இதையும் படிங்க: கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்திலும் மேகாவின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. இருந்தும் அவருக்கு அதைத்தொடர்ந்து கோலிவுட்டில் பெரியளவு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. சமீபத்தில் வெங்கட் பிரபு நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருந்தார்.
இந்நிலையில் மேகா ஆகாஷ் தன்னுடைய நீண்ட கால காதலரான சாய் விஷ்ணு என்பவரை விரைவில் திருமணம் செய்ய கொள்ள இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்த விழா இன்று இரு வீட்டார் முன்னிலையில் நடந்து முடிந்திருக்கிறது. இவர்களின் திருமணம் இவ்வருட கடைசியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அந்த தேதில ரிலீஸ் பண்ணி எதுக்கு பல்ப் வாங்கணும்… அக்டோபர் ரேஸில் இருந்து பின்வாங்கிய சூர்யா!..