காதலனை மிரட்டிய மேகா ஆகாஷ்… இதனால்தான் இந்த திடீர் திருமண அறிவிப்பா?
Megha Akash: தமிழ் நடிகை மேகா ஆகாஷ் திருமண அறிவிப்பு திடீரென வெளியாகியிருக்கும் நிலையில் அவருடைய கணவர் மற்றும் காதல் குறித்த முக்கிய தகவல்களை திரைவிமர்சகர் நடிகரான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் கூறும்போது, நடிகை மேகா ஆகாஷ் முன்னாள் பிரபல மந்திரி திருநாவுக்கரசர் மகனை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். மணமகன் பெயர் சாய் விஷ்ணு. 30 வயதில் எம்பியானவர் திருநாவுக்கரசர். இவர் அக்கா மற்றும் தங்கையை மணந்து கொண்டார். இரண்டாவது மனைவியின் கடைசி மகன் தான் சாய் விஷ்ணு.
இதையும் படிங்க: உதயசூரியன்னு என்கிட்ட சொல்லி சீன் போடாத!.. எம்.ஜி.ஆரிடம் கோபப்பட்ட எம்.ஆர்.ராதா!…
இவர் சினிமாவில் ஆர்வம் கொண்டு இருந்ததால் வெளிநாட்டில் படிக்க வைத்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்பு இல்லை. இதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வெற்றி இயக்குனர் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்தார். திருநாவுக்கரசர் சிபாரிசின் பெயரில் தான் சேர்த்துக்கொள்ளப்பட்டாராம்.
ஆனால் அவருக்கு இயக்கும் வாய்ப்பு வரவில்லை. இதனால் சொந்த படம் எடுக்கும் முடிவுக்கு வருகிறார். ரொம்பவே வசதியான திருநாவுக்கரசரிடம் இதை கேட்டு இருக்கிறார். இதனால் டெஸ்டாக குறும்படம் எடுக்க சொல்லி அதை எடுத்து இருக்கிறார். அதையடுத்து மேகா ஆகாஷ் அதில் நடித்தாராம்.
இதையும் படிங்க: சாமி கும்பிட வந்தா இப்படி ஒரு கேள்வியா கேட்பீங்க? நமீதாவுக்கு ஏற்பட்ட அவமானம்
அப்போதில் இருந்து இருவருக்கும் காதல் கசிந்தது. 6 வருட காதலுக்கு பின்னர் மேகா ஆகாஷ் மிரட்டிய பின்னரே இந்த திருமணம் நடக்க இருக்கிறதாம். ஆனால் அரசியல்வாதி தரப்பில் இருந்து எந்ததகவலும் வெளியாகவில்லை. மேகா ஆகாஷ்தான் மெதுவாக சொல்லி பின்னரே புகைப்படத்தினையும் வெளியிட்டு இருக்கிறார்.
நல்ல நடித்தால் கூட இந்த காதலால் தான் மேகா ஆகாஷ் கோலிவுட்டில் நிறைய படங்களை ஒப்புக்கொள்ளவில்லையாம். தனுஷ் படத்தில் நடித்த போதே சர்ச்சை கசிந்த நிலையில் அதன் பின்னர் பல வருடம் கழித்தே மழை பிடிக்காத மனிதன் ரிலீஸானது. விரைவில் இந்த ஜோடியின் திருமணம் செப்டம்பரில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.