மேனன் கேரக்டரில் முதலில் இந்த நடிகரைதான் யோசிச்சேன்… ஆனா? வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

Venkat Prabhu: இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய கோட் திரைப்படத்தில் மைக் மோகன் நடித்த கேரக்டரில் பிரபல நடிகர்கள் சிலரை தான் யோசித்தாராம். ஆனால் அது நடக்காமல் போனதன் காரணம் குறித்து தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் பணிக்குள் நுழைய இருக்கும் தளபதி விஜய் தன்னுடைய கடைசி கட்ட சினிமா கேரியரில் இருக்கிறார். அவருடைய கடைசி படங்களில் ஒன்றாக சமீபத்தில் வெளியானது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: அரண்மனை4ஐ தொடர்ந்து காஞ்சனா4… ஹீரோயின் யாரு தெரியுமா? சுவாரஸ்ய அப்டேட்

படத்தில் வில்லன் வேடத்தில் மைக் மோகன் நடித்திருக்கிறார். அவர் மேனன் என்ற உளவுத்துறையின் தலைவராக நடத்த இருந்தார். முதலில் இந்த கேரக்டருக்கு அரவிந்த்சாமி மற்றும் மாதவனை தேர்வு செய்யலாம் என வெங்கட் பிரபு யோசித்து இருக்கிறார்.

Aravind swamy_Madhavan

ஏனெனில் ஜெயராமிற்கு முன்னாள் இருந்த தலைவர் மேனன். அவர் செய்யும் தவறை அக்குழுவில் இருக்கும் விஜய் தன்னுடைய நண்பர்களுடன் கண்டறிகிறார். இதை முதலில் காட்சியாக எடுக்க யோசித்த பின்னர் நீளம் கருதி அதை டயலாக்கில் முடித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: கணவர் எப்படி இருக்கணும்னு ரவிக்கிட்ட கத்துக்கணும்!.. வைரலாகும் ஆர்த்தி பேட்டி!…

இதனால் அவர் ஜெயராமை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும். அரவிந்த்சாமி மற்றும் மாதவன் அதற்கு செட்டாகாமல் போய்விடுவார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களை படத்திற்கு கொண்டு வந்தால் அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்குமாறு காட்சிகள் அமைக்கப்பட வேண்டும்.

அவர்களுக்காக ஏதாவது மாற்றி செய்ய வேண்டியதாகி விடும். இதனால் தான் அந்த கேரக்டருக்கு மோகனை தேர்வு செய்ததாக வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.

Related Articles
Next Story
Share it