Connect with us
K.B

Cinema History

பெண்களின் மீது ஆண்களின் பார்வை இப்படித் தானே இருக்கு… சென்சாரில் தப்பித்த பாக்கியராஜ் படத்தைப் பாருங்க

தமிழ்த்திரை உலகில் திரைக்கதை மன்னன் என்று பெயர் பெற்றவர் நடிகரும், இயக்குனருமான கே.பாக்கியராஜ். இவர் நடித்து இயக்கிய சின்ன வீடு படம் இன்று வரை எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு ஒரு பெருமை உண்டு. முதல் பெண் ஒளிப்பதிவாளர் பணியாற்றிய படம் இதுதான். பி.ஆர்.விஜயலட்சுமி என்ற பெண் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

இதையும் படிங்க… குண்டுசட்டிக்குள் கதையை ஓட்டினால் படம் எப்படி வெற்றிபெறும்? தோல்வியை ஒப்புக்கொண்ட சிவாஜி…!

சின்னவீடு என்ற சொல்லே ரெட்டை அர்த்தம் தருவதாக உள்ளது. இந்தப் படம் முழுவதும் அப்படிப்பட்ட வசனங்கள் ஏராளம் உண்டு. ஆனாலும் படம் தாய்மார்களைப் பெரிதும் கவர்ந்தது. அது எப்படி என்பது ஆச்சரியமான விஷயம் தான்.

கணவன், மனைவிக்கும் இடையிலான அன்பு, பாசத்தைப் படத்தில் தௌ;ளத் தெளிவாகக் காட்டியிருப்பார் பாக்கியராஜ்.

இந்தப் படத்தில் கோவை சரளா இளமையானவர் தான். இருந்தாலும் பாக்கியராஜின் அம்மா கதாபாத்திரத்தில் துணிந்து நடித்திருப்பார். பெண்கள் என்றாலே ஆண்கள் எப்படிப் பார்ப்பார்கள்?

அவர்களது பார்வை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சொல்லும் படம் இதுதான். படத்தில் இடைவேளைக்கு முன்பு வரை ஜாலியான பாக்கியராஜையும், அதன்பிறகு சீரியஸான பாக்கியராஜையும் பார்க்கலாம். இவர் குண்டான பொண்டாட்டியைக் கேலி செய்யும் போது கலகலப்பூட்டி விடுகிறார்.

அதே போல இரட்டை அர்த்த வசனங்களையும் இவர் நாசூக்காகக் கையாண்டு இருப்பார். இது தான் பாக்கியராஜிக்கே உரிய தனி ஸ்டைல். அதனால் அந்தக் காலத்தில் இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்ததுமே பலரும் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக வந்து குவிந்து விட்டனர். அது மட்டுமல்லாமல் படத்தில் இளையராஜாவின் இசையும், பாடல்களும் பிரமாதமாக இருந்தன.

இதையும் படிங்க… ஒரே டார்ச்சர்!. இனிமே யார் கேட்டாலும் ‘நோ’ தான்!.. கடுப்பான விஜய் சேதுபதி!..

இந்தப் படத்தின் தலைப்பு இரட்டை அர்த்தம் தரும் வசனத்துடன் இருந்தபோதும் படத்தை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழலாம். அதற்கு உணர்வுப்பூர்வமான திரைக்கதை தான் காரணம். கணவன் மனைவி உறவு பற்றி எத்தனையோ படங்கள் வந்து இருந்தாலும் ‘சின்னவீடு’ எப்போதுமே தனி முத்திரை பதித்த படம் தான். படத்தில் சிட்டுக்குருவி வெட்கப்படுது பாடல் ரொம்பவே பிரபலம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top