Connect with us

Mental Manadhil Movie: விரைவில் வெளியாகும் மெண்டல் மனதில் பர்ஸ்ட் சிங்கிள்

latest news

Mental Manadhil Movie: விரைவில் வெளியாகும் மெண்டல் மனதில் பர்ஸ்ட் சிங்கிள்

செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் திரைப்படம் ‘மெண்டல் மனதில்’. இப்படத்தில் மாதுரி ஜெயின் நாயகியாக நடிக்கிறார். இது இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும், துருவ துருவங்களுக்கு இடையிலான ஒரு உறவை சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட படமாகும். இப்படம் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி. பிரகாஷால் தயாரிக்கப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கி வரும் படம் மெண்டல் மனதில் . ஜி.வி.பிரகாஷ் நாயகனா நடித்து வரும் இப்படத்தில் மாதுரி ஜெயின் நாயகியாக நடித்து வருகிறார். காதல் கொண்டேன்’, 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்களின் வரிசையில் இந்த படமும் காதலை மையமாக குறிப்பாக தற்போதைய இளைஞர்களின் காதலை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை காதலை தின வாழ்த்துக்களுடன் அப்படகுழுவினர் அறிவித்துள்ளனர்.

To Top