மெட்டி ஒலி சீரியல் நடிகை திடீர் மரணம்.... அதிர்ச்சியில் ரசிகர்கள்.....

by adminram |   ( Updated:2021-10-17 06:26:00  )
uma mageswari
X

படங்களுக்கும் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதோ அதே அளவகற்கு சீரியலுக்கும், சீரியல் நடிகர்களுக்கும் வரவேற்பு உள்ளது. இதுதவிர சீரியல் நடிகர்களுக்கென தனி ரசிகர்களும் உள்ளனர். அப்படி பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியல் தான் மெட்டி ஒலி.

சன் டி.வி.யில் ஒளிபரப்பான இந்த சீரியல் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது என்றும் கூறலாம். பல எபிசோடுகளை கடந்து ஓடிய மெட்டி ஒலி சீரியலுக்கு இல்லத்தரசிகள் பலர் ரசிகைகளாக இருந்தனர். திருமுருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மெட்டி ஒலி சீரியலில் டெல்லி குமார், சேத்தன், காவேரி, காயத்ரி, போஸ் வெங்கட், நீலிமா ராணி, சாந்தி வில்லியம்ஸ், தீபா வெங்கட், உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த 2002 முதல் 2005 வரை சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிய மெட்டி ஒலி சீரியல் கடந்த லாக் டவுன் சமயத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட போதும் அதே அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. இப்படி மெகா ஹிட் கொடுத்த சீரியலில் விஜி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த சின்னத்திரை நடிகை உமா மகேஷ்வரி திடீரென உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த உமா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வயதில் அவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story