கமலின் பெருமையை முதலில் வெளிச்சம் போட்டு காட்டியவர்!.. ‘களத்தூர் கண்ணம்மா’ வில் நடந்த அதிசயம்..

இன்று தமிழ் சினிமாவில் ஒரு உலக நாயகனாக அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு உன்னதமான நடிகராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் இவர் அறியாத விஷயங்களே இல்லை. எல்லாத் துறைகளிலும் கால் பதித்து தனது திறமையை காட்டி வருகிறார்.

kamal1

kamal1

ஒரு என்சைக்ளோபீடியாவாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் கமல். குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்து கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கும் மேலாக சினிமாவை கரைத்துக் குடித்து வைக்கிறார் என்றே சொல்லலாம். நடனம், பாட்டு, நடிப்பு, இசை, என பன்முக கலைஞராக திகழ்ந்து வரும் கமலை பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்களை ஒரு பேட்டியில் கூறினார் பழம்பெரும் இயக்குனர் எஸ்.பி,முத்துராமன்.

இதையும் படிங்க : தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ?.. விழிபிதுங்கி நிற்கும் தனுஷ்.. ‘வாத்தி’ படம் தள்ளிப் போவதற்கான காரணம் இதுதானா?..

கமல் முதலில் அறிமுகமான படம் களத்தூர் கண்ணம்மா. அவரை அந்த படத்தின் இயக்குனரான பீம்சிங்கிடம் அழைத்துக் கொண்டு போனதே முத்துராமன் தானாம். அதுவும் அவனை தூக்கிக் கொண்டு போய் காண்பித்தேன், இன்று உலக நாயகனாக ஜொலிக்கிறான் என்று தனது பெருமிதத்தை கூறினார் முத்துராமன்.

kamal3

kamal3

கமலை பார்த்த அனைவரும் இவன் கண்டிப்பா நல்ல இடத்திற்கு வருவான் என்று அப்பவே பாராட்டினார்களாம். ஆனால் கமல் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் கமிட் ஆனது அந்த நேரத்தில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமான தேசியராணி என்ற குழந்தையாம். அவருக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து புக் செய்து வைத்திருக்கின்றனர்.

ஆனால் கமலை ஏவிஎம் மெய்யப்பச்செட்டியார் பார்த்ததும் கமல் தலை மீது லைட்டை அடித்து ஏதாவது ஒரு சீன் நடித்துக் காட்டு என்று கூறியிருக்கிறார். கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் அசால்ட்டாக நடித்துக் காட்டினாராம் கமல். அதன் பின்னரே கமலை களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வைத்திருக்கின்றனர். அந்த ஒளி தான் கமலை இன்று வரை பிரகாசமாக இருக்க வைக்கிறது என்று எஸ்.பி,முத்துராமன் அந்த பேட்டியில் கூறினார்.

kamal2

meyyappa chettiyar

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it