More
Read more!
Categories: Cinema History Cinema News latest news

டைட்டிலில் சொந்த பெயரை கூட போட முடியாத சோகம்!.. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக வந்த காமெடி நடிகர்!..

MGR: எம்.ஜி.ஆர் என்றால் சினிமாவில் நடிகராக இருந்தார்.. நிறைய சம்பளம் வாங்கினார்.. நிறைய பேருக்கு உதவி செய்தார்.. அவருக்கு பல ரசிகர்கள் இருந்தனர்… சினிமா புகழை வைத்து அரசியலில் இறங்கி தமிழக முதல்வராகவும் மாறினார் என்றும் மட்டும்தான் பலரும் நினைப்பார்கள்.

ஆனால், பலருக்கும் தெரியாத மறுபக்கம் எம்.ஜி.ஆருக்கு இருக்கிறது. சிறு வயதிலேயே வறுமையில் வாடியது.. சாப்பாட்டுக்கு வழியில்லாமல் நாடகத்துக்கு நடிக்கப்போனது.. அம்மாவரை பிரிந்து வெகு தூரத்தில் தங்கி நாடகத்தில் நடித்து வந்தது என எம்.ஜி.ஆர் பட்ட கஷ்டங்கள் பலருக்கும் தெரியாது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஆசையாக துவங்கிய படம்!. எம்.ஜி.ஆர் மீது வந்த கோபம்!.. கண்ணதாசன் செஞ்ச வேலைய பாருங்க…

ஏழு வயதில் நாடகத்திற்கு போய் சுமார் 30 வருடங்கள் நடித்து, பின்னர் சினிமாவில் 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, தனது 47வது வயதில் ராஜகுமாரி படத்தில் ஹீரோ ஆனவர்தான் எம்.ஜி.ஆர். சின்ன சின்ன வேடங்களில் நடித்தபோது பல அவமானங்களை படப்பிடிப்பில் சந்தித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

சினிமாவில் நடிக்க துவங்கியபோது அவரின் பெயரை கூட பயன்படுத்த முடியாத நிலை கூட அவருக்கு இருந்தது. 1937 முதல் 1947 வரை எம்.ஜி.ஆர் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அந்த படங்களின் டைட்டில் கார்டில் அவரின் பெயர் எம்.ஜி.ராம்சந்தர் என்றுதான் இருக்கும். அதுமட்டுமல்ல எம்.ஜி.ராம்சந்தர் என்றுதான் கையெழுத்தும் போடுவார்.

இதையும் படிங்க: கலைஞர் மகனுக்கு வாலி எழுதிய பாடல்!.. கடுப்பாகி எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி…

அவரின் நண்பர்கள் கூட ‘இது என்ன ராம்சந்தர்?. வடநாட்டுக்காரன் மாதிரி.. அழகா ராமச்சந்திரன் என கையெழுத்து போடுப்பா’ என சொன்னார்கள். பலருக்கும் அது புரியாத புதிராக இருந்தது. ஒருபடத்தின் பாராட்டுவிழாவில் எம்.ஜி.ஆர் அதற்கான காரணத்தை சொன்னார். எம்.ஜி.ஆர் நடிக்க வந்தபோது டி.ஆர்.ராமச்சந்திரன் என்கிற ஒரு பிரபல நடிகர் இருந்தார்.

எம்.ஜி.ஆர் தனது பெயரை சொன்னால் ‘சபாபதி படத்தில் நடித்தாரே அந்த ராமச்சந்திரனா?’ என எல்லோரும் கேட்டார்கள். எனவே, அவரோடு போட்டி போட முடியாது என்பதால் தனது பெயர் எம்.ஜி.ராம்சந்தர் என இடம் பெற்றது என விளக்கமளித்தார். ‘அந்தமான் கைதி’ என்கிற படத்தில்தான் முதன்முதலில் எம்.ஜி.ஆரின் பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன் என போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெயலலிதா செய்ததை மறக்காத எம்.ஜி.ஆர்!.. அந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான்!..

Published by
சிவா

Recent Posts