நெருக்கமாக பழகிய ஜெயலலிதா - ஜெய்சங்கர் : துப்பாக்கி எடுத்து சென்ற எம்.ஜி.ஆர்

by சிவா |
mgr
X

நடிகரும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் தன்னுடன் நடித்த நடிகைகள் லதா, மஞ்சுளா, ஜெயலலிதா, சரோஜா தேவி ஆகியோருடன் அன்பாக பழகுபவர் என்றாலும் ஜெயலலிதா மீது அவருக்கு தனி பாசம் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

jayalalitha

ஜெயலலிதா நன்றாக ஆங்கிலம் பேச தெரிந்தவர். மேலும், படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் அதிகம் பேச மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து ஆங்கில புத்தகம் படித்துக்கொண்டிருப்பார். நடிகர் ஜெய்சங்கரும் நன்றாக ஆங்கிலம் பேச தெரிந்தவர். எனவே, அவருடன் மட்டும் ஜெயலலிதா நன்றாக சிரித்து பேசுவார்.

jai shankar

இந்த விவகாரம் எம்.ஜி.ஆருக்கு தெரிய வர துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, ஜெயலலிதா தங்கியிருந்த போயஸ்கார்டன் வீட்டிற்கு சென்றுள்ளார். ஜெ.வின் வீட்டில் ஜெய்சங்கர் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவர் அங்கே சென்றுள்ளார். ஆனால், ஜெய்சங்கரின் நல்ல நேரம் அவர் அங்கு இல்லை. இருந்திந்தால் அவரை சுட்டிருக்க வாய்ப்புண்டு.

இந்த தகவலை நடிகை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளர்.

Next Story