Cinema History
இது என் படமே இல்ல!.. நான் சொன்ன எதையுமே செய்யல!.. எம்.ஜி.ஆர் சொன்ன ஹிட் படம் இதுதான்!..
நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். துவக்கத்தில் ராஜகுமாரி, மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மருதநாட்டு இளவரசி என தொடர்ந்து சரித்திர படங்களில் நடித்து வந்தார். கலைஞர் கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன் ஆகியோரின் வசனங்களில் அனல் பறக்கும். ரசிகர்களிடம் விசில் பறக்கும்.
எனவே, சரித்திர படங்களில் மட்டுமே எம்.ஜி.ஆர் நடிக்க முடியும். ஜனரஞ்சகமான கதைகளில் அவரால் நடிக்க முடியாது என திரையுலகில் பேசினார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் அதுபோன்ற படங்களிலும் நடித்து வெற்றிக்கொடி நாட்டினார். எம்.ஜி.ஆருக்கு ஒரு தனி ஸ்டைல் உண்டு. ஒரு ஃபார்முலா உண்டு.
இதையும் படிங்க: அது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் செட் ஆகும்!. வேற எவனுக்கும் வராது!.. ஓப்பனா சொன்ன சிவாஜி!..
அதை கடைசி வரை கடைபிடித்தார். சண்டை போடும் ஸ்டைலிலும், நடனமாடும் ஸ்டைலிலும் தனக்கென ஒரு தனி பாணியை எம்.ஜி.ஆர் கடை பிடித்தார். அதேபோல், அவரின் கதையில் ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் போலவே அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். மேலும், எம்.ஜி.ஆர் யாரை சொல்கிறாரோ அவர்தான் கதாநாயகி.
நம்பியார், அசோகன் என யாரேனும் ஒருவர் வில்லனாக இருப்பார். அவர்களுடன் அதிரடி சண்டை காட்சிகளில் நடிப்பார் எம்.ஜி.ஆர். இதைத்தான் எம்.ஜி.ஆரின் ரசிகர்களும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் தனது பாணியிலிருந்து முற்றிலும் விலகி நடித்த ஒரே திரைப்படம் அன்பே வா மட்டுமே.
ஏவிஎம் தயாரிப்பில் திருலோகச்சந்தர் இயக்கிய படம் இது. ‘கதாநாயகி ஜெயலலிதா’ என்றார் எம்.ஜி.ஆர். ஏவிஎம் நிறுவனமோ ‘சரோஜாதேவி’ என்றது. ‘கதை என் ஃபார்முலாவில் இருக்க வேண்டும்’ என்றார் எம்.ஜி.ஆர். ஆனால், ‘இல்லை இது புதுமாதிரியான கதை’ என்றது ஏவிஎம். கதாநாயகியின் தந்தை வேடத்திற்கு தங்கவேலுவை சொன்னார் எம்.ஜி.ஆர். ஆனால், டி.ஆர்.ராமச்சந்திரனை புக் செய்தது ஏவிஎம்.
இந்த படத்தில் வில்லன் இல்லை. எனவே, அசோகனுடன் ரத்தம் சொட்ட சொட்ட சண்டை போட விரும்பினார் எம்.ஜி.ஆர். அதற்கு வாய்ப்பு இல்லை என்றார். எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு எப்போதும் ஸ்டுடியோவில்தான் நடக்கும். ஆனால், சிம்லா, ஊட்டி போன்ற இடங்களில் அதிக காட்சிகள் எடுக்கப்பட்டது. இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய எம்.ஜி.ஆர் ’இது என் படமல்ல. இயக்குனரின் படம்’ என்றார். அதுதான் உண்மையும் கூட.