Connect with us

Cinema History

இவங்களுக்கா பிரச்னை? குழப்பத்தில் இருந்த ரஜினிகாந்த்… எம்.ஜி.ஆர் கொடுத்த அட்வைஸ்!..

Rajinikanth: ரஜினிகாந்துக்கும், முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆருக்கும் பிரச்னை என்று செய்தி தான் அதிகளவில் இருக்கிறது. ஆனால் ரஜினிக்காக எம்ஜிஆர் ஷூட்டிங்கிற்கே வந்த ஆச்சரிய சம்பவமும் நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் யானையுடன் நடித்த திரைப்படம் அன்னை ஓர் ஆலயம். இப்படத்தினை இயக்கியது ஆர்.தியாகராஜன். இவர் எம்ஜிஆரின் ஆஸ்தான நண்பரும், பிரபல தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்ப தேவரின் மருமகன். அதனால் இப்படம் குறித்து அவ்வப்போது எம்ஜிஆருக்கும் தகவல்கள் தெரிவிப்பது வழக்கமாம்.

இதையும் படிங்க: குடிச்சு கூத்தடிக்கிறது ஒரு படமா? மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த பிரபலம்

அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தின் ஷூட்டிங் 1979ல் நடந்தது. படம் அந்த அந்த வருட தீபாவளி தினத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இந்த படத்தில் ரஜினியின் உடல்நிலை ரொம்பவே கவலைக்கிடமாக இருந்ததாம். தொடர் ஷூட்டிங், அவரின் முரட்டு பழக்கங்களால் தூங்காமல் இருந்தவர். எப்போதும் குழப்பமான மனநிலையிலே இருந்தாராம்.

இதனால் கம்பெனி தயாரிப்பு நிர்வாகி, உதவி இயக்குனர் விஜயசிங்கம் மற்றும் கார் டிரைவர் என மூவர் இணைந்த குழு ரஜினியுடனே இருக்கும்படி இயக்குனர் தியாகராஜன் ஏற்பாடு செய்து இருந்தார். இருந்தும் இயக்குனருக்கு பதட்டம் இருந்துக்கொண்டே இருந்ததாம்.

இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் மீது Metoo புகாரளித்த நடிகை.. பிரபலம் ஆகிட்டாலே பிரச்னை தானா?…

இப்படத்தின் படப்பிடிப்பு சத்யா ஸ்டூடியோஸில் நடந்த போது எம்ஜிஆரின் செயலாளர் பத்மநாதனுடன் பேசிக்கொண்டு இருந்த தியாகராஜன் ரஜினியின் நிலை குறித்தும் சொல்லினாராம். இந்த தகவல் எம்ஜிஆருக்கும் சென்றதாம். உடனே யோசிக்காத எம்ஜிஆர் நேராக ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்தாராம்.

ரஜினியை சந்தித்தவர். உடல் விஷயத்தில் கவனமாக இருங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுதலாம் என அட்வைஸ் செய்தாராம். இதை தொடர்ந்தே ரஜினியும் கொஞ்சம் ஓய்வு எடுத்து சரியானார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஏற்பட்ட பிரச்னையால் இப்படத்தின் அம்மா வெருகேனு அம்மா என்ற தெலுங்கு வெர்சனிலும் நடித்து கொடுத்தாராம் ரஜினிகாந்த்.

இதையும் படிங்க: வடிவேலு செஞ்ச காரியத்துக்கு அரிவாளை தூக்கி வெட்டப் போன நடிகர்! இந்தளவுக்கு நடந்திருக்கா?

google news
Continue Reading

More in Cinema History

To Top