சில்க் ஸ்மிதாவிற்கு அறிவுரை வழங்கிய மக்கள் திலகம்!..அப்படி என்ன சொன்னாரு தெரியுமா?..

by Rohini |
silk_main_cine
X

இன்றைய சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்களின் படங்களில் நடிகர் யோகிபாபு எப்படி ஒரு தவிர்க்கமுடியாத நடிகராக இருக்கிறாரோ அதே போல தான் 80களில் ரஜினி, கமல், விஜயகாந்த் கார்த்தி, சத்யராஜ் போன்ற நடிகர்களின் படங்களில் நடிகை சில்க் ஸ்மிதா தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்தார்.

silk1_cine

விஜயலட்சுமி என்ற புனைப்பெயர் கொண்ட சினிமாவிற்காக சில்க் ஸ்மிதா என்று மாறினார். அந்த கால சினிமா ஒட்டுமொத்தத்தையும் சில்க் ஸ்மிதாவே ஆக்கிரமித்து வைத்திருந்தார்.

இதையும் படிங்கள் : ஆஸ்கார் விருதுக்கு சென்ற தமிழ் படங்கள்… ஹிட் லிஸ்டில் இந்த படமும் இருக்கா?

silk2_cine

இப்படி பட்ட சில்க் ஸ்மிதாவை முதன் முறையாக ஒரு குணச்சித்திர வேடத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்தார். முதலில் பிரபலங்கள் அனைவரும் சில்க் ஸ்மிதாவை குணச்சித்திர வேடத்தில் ரசிகர்கள் ஆதரிப்பார்களா? என்று பயந்து பாரதிராஜாவிடம் கூற துணிந்து நடிக்க வைத்தார்.

silk3_cine

ஆனால் சில்க் கெரியரில் அந்த கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது. நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க சில்க் ஸ்மிதாவிற்கு அறிவுரை வழங்கினார்கள் என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார். இதே ஆசை சில்கிற்கும் இருந்திருக்கிறது. ஆனால் இயக்குனர்கள் அப்படி விரும்பவில்லை. அவரை ஒரு கவர்ச்சி கன்னியாகவே காட்ட விரும்பினர். சில்க்ஸ்மிதாவும் மக்கள் என்ன ஆசை படுகிறார்களோ அதன் படியே இருக்கட்டும் என தொடர்ந்து கவர்ச்சிகளை அள்ளிவீசினார்.

Next Story