என்னம்மா புடவைலாம் கட்டி வந்திருக்க?.. இருந்தாலும் சின்னவருக்கு கொஞ்சம் குசும்பு அதிகம்தான்..

by Rohini |   ( Updated:2023-05-04 06:36:38  )
silk
X

silk

கோலிவுட்டில் 80களில் தன் கவர்ச்சிகரமான நடனத்தாலும் அசத்தும் கண்ணழகாலும் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிற்கு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் சில்க்.

இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஏராளம். கிட்டத்தட்ட ஒரு கனவு கன்னியாகவே வாழ்ந்தார். சில்க் ஸ்மிதா தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

சினிமாவிற்கு உள்ளேயும் வெளியேயும் சில்க் ஸ்மிதாவின் பெயர் அடிக்கடி அடிபட்டுக் கொண்டே இருந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரின் பெயரை உச்சரித்துக் கொண்டே வந்தனர். இன்று வரைக்கும் எத்தனையோ நடிகைகள் வந்தாலும் சில்க் ஸ்மிதா ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை.

தொடர்ந்து கவர்ச்சி நடனத்தையே ஆடி வந்த சில்க் ஸ்மிதாவை அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் பாரதிராஜா ஒரு குணச்சித்திர நடிகையாக மாற்றினார். அந்தப் படத்தில் ஒரு அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து அந்த படத்தின் மூலமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அலைகள் ஓய்வதில்லை படம் எப்பேர்பட்ட வெற்றியைப் பெற்றது என அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்தப் படத்தின் வெற்றி விழாவை திறையுலகினர் கொண்டாடி மகிழ்த்தனர் .அந்த விழாவிற்கு எம்ஜிஆரும் வருகை புரிந்தார்.

அப்போது மேடையில் ஏறிய சில்க் ஸ்மிதாவை பார்த்ததும் எம்ஜிஆருக்கு உடனே ஆச்சரியமாம். ஏனெனில் சில்க் ஸ்மிதா தளதளவென பட்டுப்புடவையுடன் மல்லிகை பூவும் வைத்து ஒரு குடும்பப் பாங்கான பெண்ணாக அந்த விழாவிற்கு வருகை புரிந்தாராம். அப்போது மேடையில் ஏறிய சில்க் ஸ்மிதாவிடம் எம்ஜிஆர் " சேலை கட்டி அழகா இருக்கியே" என்று கூறினாராம். அப்போது அருகில் இருந்த ஒரு பிரபலம் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் இவர் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திலேயே இந்த விழாவிற்கும் வந்திருக்கிறார் .என்று எம்ஜிஆரிடம் தெரிவித்தாராம்.

உடனே எம்ஜிஆர் சில்க்ஸ்மிதாவிடம் இதுவே உனக்கு அழகாக இருக்கிறது . இனிமேல் இந்த மாதிரியான கதாபாத்திரத்திலேயே நடி, மேலும் உன் பெயரை ஸ்மிதா என்றே மாற்றிக்கொள் . முன்னாடி இருக்கும் சில்க் வேண்டாம் என கூறினாராம்.

இதையும் படிங்க : விஜயை வச்சு அப்பவே இத பண்ணிட்டேன்!.. லோகேஷுக்கு ஒரு வேளை குருவா இருப்பாரோ?..https://cinereporters.com/already-i-did-this-challenge-to-lokesh/

Next Story