எம்ஜிஆர் ஆடும்போது பெண் உதவியாளரை தான் கேட்பார்!.. இப்படி ஒரு பழக்கமா?..

Published on: March 11, 2023
mgr
---Advertisement---

தமிழ் சினிமாவில் சின்னவர் என அனைவராலும் அழைக்கப்படுபவர் புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் எம்ஜிஆர். எம்ஜிஆரை பற்றி நாள்தோறும் பல சுவாரஸ்ய தகவல்கள் வந்து நம் செவியை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. காலங்கள் போனாலும் அவரின் புகழ் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

mgr1
mgr1

அதற்கு முக்கிய காரணம் அவரிடம் இருந்து அந்த பண்பு தான். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி ஒரு தலைசிறந்த தலைவராக ஒரு தலை சிறந்த நடிகராக இருந்திருக்கிறார் எம்ஜிஆர். அவருடன் பணியாற்றிய பல கலைஞர்கள் இன்று வரை அவரின் புகழைப் பாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

Also Read

அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பில் எம்ஜிஆர் நடந்து கொள்ளும் முறையை பற்றியும் பல தகவல்கள் வெளிவந்தன. அதிலும் அந்தக் காலத்தில் பெரிய நடன இயக்குனராக இருந்தவர் புலியூர் சரோஜா. இவர் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

mgr2
mgr2

அதுமட்டுமில்லாமல் ரஜினி, கமல் ஆகியோருடன் இணைந்தும் பணியாற்றியிருக்கிறார். ஆரம்பத்தில் உதவி நடன இயக்குனராக வந்த புலியூர் சரோஜா எம்ஜிஆர் படங்களில் பெண் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறாராம். அவர் தான் எம்ஜிஆரை பற்றி ஒரு விஷயத்தை கூறினார்.

எம்ஜிஆர் நடித்த பாடல்களிலேயே மிகவும் பிரபலமான பாடல் ‘ராஜாவின் பார்வையில்’ என்ற பாடல். இந்தப் பாடலை கம்போஸ் பண்ணினது மாஸ்டர் சோப்ரா. அவருக்கு உதவியாளராக இருந்தவர் புலியூர் சரோஜா.அப்போது ரிகர்சல் செய்துக் கொண்டிருக்கும் போது எம்ஜிஆர் சரோஜாவிடம் எப்படி ஆக்‌ஷன் பண்ண வேண்டும் , செய்து காட்டு என்று சொல்லுவாராம்.

mgr3
puliyoor saroja

அதே போல் எம்ஜிஆர் ஆடும் போது ஆண் உதவியாளர்கள் இருந்தால் ஆடமாட்டாராம்.பெண் உதவியாளர்கள் தான் வேண்டும் என்று சொல்லுவாராம். அதனாலேயே தான் புலியூர் சரோஜா எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் பணிபுரிந்ததன் காரணமாம். மேலும் இவரை எம்ஜிஆருக்கு மிகவும் பிடிக்குமாம். இந்த சுவாரஸ்ய தகவலை புலியூர் சரோஜா ஒரு பேட்டியின் போது கூறினார்.

இதையும் படிங்க : ராமராஜன் நடிப்பை விட்டதுக்கு உண்மையான காரணம் இதுதான்… இப்படி ஒரு அதிர்ச்சி தகவலா?