இவரெல்லாம் ஒரு இயக்குனரா? நல்ல இயக்குனர் கிடைக்கலையா... எம்.ஜி.ஆரை சீண்டிய பானுமதி...
தமிழ் சினிமாவில் நடிகைகளில் பெரும் மாஸ் காட்டிய முதல் நடிகை என்றால் அது பானுமதி தான். அவர் நடிப்பில் நடிகர்களையே மிரட்டும் திறன் உள்ளவர். அப்படிப்பட்ட பானுமதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் பெரும் சச்சரவே ஒரு படத்தில் நடந்து இருக்கிறது.
எம் ஜி ஆருடன் “நாடோடி மன்னன்” திரைப்படத்தில் மதனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் பானுமதி. இப்படத்தினை தயாரித்தது எம்.ஜி.ஆரின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி. முதலில் இப்படத்திற்கு இசையமைக்க இருந்தது, என். எஸ். பாலகிருஷ்ணன். அவர் இசையில் ‘ஆண்டவன் எங்கே அரசாண்டவன் எங்கே’ என்ற பாடலை இசையமைக்கப்பட்டு இருந்தது.
பானுமதிக்காக தான் அந்த பாடல் இசையமைக்கப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர் அதில் சில மாற்றங்களை கூறினாராம். இதில் கடுப்பான பானுமதி உங்க இஷ்டத்துக்கு மாற்றினால் பாடல் தன்மையே மாறிவிடும் எனக் கூறி இருக்கிறார். இது சினிமா பாட்டு. ரசிக்கும் படி இருந்தால் போதும். அதனால் ராகங்கள் மாறினால் கவலை இல்லை” என்றார் எம் ஜி ஆர். பானுமதியோ, உங்களுக்கு என்னை விட இசையைப் பற்றி தெரியுமா? சும்மா இருங்கள் என்றாராம். இதில் நொந்த எம்ஜிஆர் அந்த இடத்தினை விட்டு சென்றாராம்.
இதையும் படிங்க: அந்த நடிகையோடு ஒப்பிடும் போது நான் சின்னப்பையன்!… நடிகர் திலகமா இப்படி சொல்றது ?…. யாருப்பா அந்த நடிகை ?…
அங்கு மட்டும் முடியவில்லை. தொடர்ந்து இருவருக்கும் தள்ளுமுள்ளு நடந்து இருக்கிறது. இதில் கடுப்பான சக்கரபாணி அந்த பாட்டையே நீக்கி இருக்கிறார். இருந்தும் ஒய்ந்த பாடில்லை. இதில் அப்படத்தினை எம்.ஜி.ஆர் தான் இயக்கினார். அதில் ஒருமுறை ஒரு காட்சிக்காக தொடர்ந்து ரீடேக் சொல்லிக்கொண்டே இருந்தாராம். இதில் எரிச்சலான பானுமதி, இவருக்கு இயக்கத்தினை பற்றி என்ன தெரியும்? நல்ல இயக்குனர் வேறு கிடைக்கவில்லையா எனக் கமெண்ட் அடித்திருக்கிறார்.
ஆனால், இப்போது உள்ள நடிகர்கள் போல பெரிதாக வெளியில் அலட்டிக் கொள்ளவில்லை எம்.ஜி.ஆர். இருந்தும் தனது கதாசிரியரிடம் உங்களுக்கு நடிகைகள் இல்லாமல் கதை எழுத தெரியாதா? என்றாராம். உடனே தனது பட கதையை கூட சிறு மாற்றம் செய்து அவர் வேறு பக்கம் செல்வது போல மாற்றினாராம். பானுமதி காட்சிகளை நீக்காமல் அவரையும் வைத்து படத்தினையும் கெடுக்காமல் முடித்து இருக்கிறார். அப்படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.