கலைஞருடன் ஏற்பட்ட மோதலால் படக்குழுவினரை பாடாய்படுத்திய எம்.ஜி.ஆர்...
தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி பிரபலங்கள் முட்டிக்கொள்வது வழக்கம் தான். அப்படி 60களில் நடிகராக இருந்த எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் ஏற்பட்ட மோதல் ஒரு படக்குழுவினையே பாதித்த கதை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
தமிழ் சினிமாவில் வசனத்தில் வசியப்படுத்திய கலைஞர் கருணாநிதி ஒரு தயாரிப்பு நிறுவனத்தினை மேகலா பிக்சர்ஸ் என்ற பெயரில் உருவாக்கினார். அப்படம் முதலில் ‘எங்கள் தங்கம்’ என்ற படத்தினை தயாரித்தது. அதில் நாயகனாக நடித்தது எம்.ஜி.ஆர். முதலில் சுமுக உறவில் இருந்த இருவரும் படக்கடைசியில் எதிரும் புதிருமாக மாறினர்.
இதில் எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய வருத்தம் இருந்தது. அதை அவர் காட்டிய விதம் தான் கொஞ்சம் சுவாரஸியமாக அமைந்தது. அதாவது அப்படத்தின் எல்லா காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டது. ஒரு சண்டைக்காட்சியில் இருந்த இரண்டு ஷாட்கள் தான் மிஞ்சம். எம்.ஜி.ஆர் நினைத்தால் ஒரு மணி நேரத்தில் அதுவும் முடிந்துவிடும். படமும் நினைத்த நேரத்தில் படப்பிடிப்பினை நிறைவு செய்துவிடலாம்.
இல்லை என்றால் அடுத்த இரண்டு மாதங்கள் எம்.ஜி.ஆரினை பிடிக்க முடியாது அவரும் வெளிநாடு செல்ல இருந்தார். இதுவே படக்குழுவிற்கு படபடப்பினை அதிகரித்தது. அன்றைய நாள் சூட்டிங்கிற்கு எம்.ஜி.ஆர் நேரத்தினை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டார். சரி அப்போ சரியான நேரத்தில் படபடப்பிடிப்பு துவங்கிவிடும் என நினைத்தனர் படக்குழு.
இதையும் படிங்க: கூண்டுக்கிளி படப்பிடிப்பில் அடிக்கடி எஸ்கேப் ஆன சிவாஜி… கடுப்பாகி கேட்ட எம்.ஜி.ஆர்…
ஆனால், எம்.ஜி.ஆரோ அங்கிருந்தவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தார். திடீரென கிளம்பி காரில் சென்றுவிட்டார். அவர் திரும்பி வரும்போது மணி 12ஐ நெருங்கி விட்டது. அவரிடம் சென்று என்ன சார் படப்பிடிப்பு நடக்குமா எனக் கேட்கவே அங்கிருந்தவர்கள் பதறினர். இப்படியே நேரம் சென்றதே ஒழிய எம்.ஜி.ஆர் மேக்கப் போட்ட படப்பிடிப்புக்கு தயாராகவே இல்லை.
அந்த சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆருடன் சோவும் நடக்க இருந்தார். அவர் காத்துக்கொண்டிருக்காமல், படப்பிடிப்பு நடக்குமா இல்லை நான் கிளம்புவேனே எனக் கேட்டாராம். உடனே எம்.ஜி.ஆர் எனக்காக நீங்க கொஞ்சம் பேசாம இருங்க என்று அவரிடம் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார். இப்படியே பேசுவதும் வெளியில் செல்வதுமாக இருந்தார் எம்.ஜி.ஆர்.
ஒரு வழியாக நள்ளிரவு 12மணிக்கு அக்காட்சிக்களை நடித்து கொடுத்தாராம். அப்போது சோவினை பார்த்து இப்போது புரிகிறதா எனச் சிரித்துக்கொண்டே கேட்டார். புரிவதா எனக்கு தூக்கம் தான் வருது எனச் சொல்லி சென்றாராம் சோ.