சினிமா உலகில் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் யார் தெரியுமா? அவருக்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல்...
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு சினிமா உலகில் முக்கிய நடிகர் ஒருவரை தனது நெருங்கிய சகாவாக வைத்திருந்தார்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான சர்வாதிகாரி. இப்படத்தில் அவருடன் நம்பியார் இணைந்து நடித்தார். எம்.ஜி.ஆருடன் நடித்த அதிர்ஷ்டம் என்னவோ அவருக்கு தமிழ் முன்னணி நடிகருடன் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் எம்.ஜி.ஆர். மீது அவருக்கு பெரிய அளவிலான பாசம் இருந்தது. அதே அளவிற்கு எம்.ஜி.ஆருக்கும் நம்பியாரிடம் நட்பு இருந்தது.
அந்த நட்பால் இருவருக்கும் அதீத நெருக்கம் இருந்தது. ஒருமுறை எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்கு வரும் போது, அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் நம்பியார் மட்டும் உட்கார்ந்தே இருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்ட இயக்குனர் நீலகண்டன், “சின்னவர் வரும்போது எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். ஆனால், நீங்கள் மட்டும் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து கொண்டே இருக்கிறீர்களே..?” என்று கேட்டார்.
இதையும் படிங்க: நம்பியார் யாருக்கும் உதவி செய்யமாட்டார்… ஏன் தெரியுமா?
இதற்கு பதிலளித்த நம்பியார், அவர் என் நண்பர். அவர் வரும்போது நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும் என்றாராம். நம்பியார் வீட்டு விசேஷங்கள் எம்.ஜி.ஆர் இல்லாமல் நடந்ததே இல்லையாம். நம்பியாருக்கு திருமணம் நடைபெற்றபோது அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆர் தனது நேரத்தினையும் அதிகமாக நம்பியாருடன் தான் செலவிடுவார்.
அதைவிட, சில சினிமா சந்திப்புகளை அதிகமாக நம்பியார் வீட்டில் வைப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். இப்படி பலமுறை இயக்குனர்களை எம்.ஜி.ஆர், நம்பியார் வீட்டில் வைத்து சந்தித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.