Connect with us

Cinema History

ஆரூர் தாஸுக்காக ஒரே மாதிரி யோசித்த சிவாஜி, எம்.ஜி.ஆர்.. அப்படி என்ன செய்தாங்க தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபலமான வசனகர்த்தா ஆரூர் தாஸுக்காக சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் ஒரே நேரத்தில் இவருக்கு கொடுத்த பரிசு குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

50களில் கொடிக்கட்டி பறந்த வசனகர்த்தாக்களில் முக்கியமானவர் ஆரூர் தாஸ். இவர் திருவாரூரை சேர்ந்தவர். அங்கிருந்து தஞ்சை இராமையாதாசிடம் வந்து சேர்ந்து, அவரிடமிருந்து கதை உரையாடல் கலையைக் கற்று கொண்டார். தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாசில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக்கொண்டார். 500க்கும் அதிகமான படங்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்.

சிவாஜி

sivaji

நடிகர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இவர் எழுதிய வசனங்கள் தான் அதிகம். ஜெமினியின் அறிவுரையின் பேரில் தான் பாசமலர் படத்துக்கு வாய்ப்புக்காக சிவாஜியை அரூர்தாஸ் சந்தித்தாராம். முதல் சந்திப்பிலேயே திருக்குறள் பலக்கூறி அவரை மயக்கிவிட்டார். அதை தொடர்ந்து பாசமலர் படத்தின் வசனகர்த்தாவானார். அதன்பின், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தாவாக ஆரூர்தாஸ் மாறினார். தேவர் பிலிம்ஸில் எம்.ஜி.ஆருக்காகவும் நிறைய படங்களுக்கும் ஆருர்தாஸ் எழுதி இருக்கிறார்.

MGR

இருவரும் படமும் ஒரே நேரத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அதற்கு பரிசுக்கொடுக்க நினைத்து இருவரும் ஆரூர்தாஸிடம் என்ன வேண்டும் எனக் கேட்டனர். இவரும் ஒண்ணும் வேணாம் அண்ணே. உங்கள் அன்பே போதும் என்றாராம். இதே கேள்வியை கேட்ட சிவாஜிக்கு அதே பதிலை கொடுத்து இருக்கிறார். அதன் பின் இருவரும் சொல்லி வைத்ததை போல, ஒரே மாதிரி தங்கத்தில் ஆரூர்தாஸ் பெயர் போட்ட ஷீல்டு, பதக்கம் கொடுத்துள்ளனர். இதை கண்ட அரூர்தாஸே அசந்து விட்டாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top