More
Categories: Cinema News latest news

எம்ஜிஆருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க காரணமாக இருந்தது அவரா? ஆனா வெளியே ஏன் தெரியல…?!

புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்றெல்லாம் போற்றப்படுபவர் எம்ஜிஆர். இவர் சினிமாவில் எப்படியோ அதே போல அரசியலிலும் ஜெயித்துக் காட்டினார். தன்னோட பலம் என்ன என்பதை உணர்ந்த எம்ஜிஆர் தன்னை ரசித்த மக்களை வைத்தே முதல்வரானார்.

ஏழை எளிய மக்களிடம் தனது நல்ல பல செயல்திட்டங்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார். அரசியலில் அவர் ஜெயிக்க அடிநாதமாக இருந்தது அவரது கட்சியின் சின்னம் இரட்டை இலை தான். இன்று வரை அதிமுகவின் வெற்றிச்சின்னமாகவே உள்ளது. அந்தச் சின்னம் வந்தது எப்படின்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

Advertising
Advertising

ரஜினியை வைத்து பைரவி என்ற படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இந்தப் படம் தான் ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கிடைக்கக் காரணமாக அமைந்தது. முதல் முறையாக ஹீரோவாக ரஜினி நடித்த படம் இது தான்.

இந்தப் படத்தை தயாரித்தவர் தாணு. படத்தோட இயக்குனர் எம்.பாஸ்கரின் மகன் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு எம்ஜிஆருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்த சுவாரசியமான சம்பவம் குறித்து சொல்கிறார்.

MGR2

எங்க பெரியப்பா சங்கரபாண்டியன் மதுரையில பிரபல வழக்கிறஞரா இருந்தாங்க. அவங்க எம்ஜிஆர் சாரோட ரொம்ப நெருக்கமா இருந்தாங்க. மதுரையில மாவட்ட செயலாளரா இருந்தாங்க. முக்கியமானது இரட்டை இலையை செலக்ட் பண்ணிக் கொடுத்ததே அவர் தான்.

முதல்ல டிரெய்ன் சின்னம், மம்பட்டி சின்னம், இரட்டை இலைன்னு மூணு சின்னத்தைக் காமிச்சிருக்காங்க. எங்க பெரியப்பா தான் இரட்டை இலை சின்னத்தை செலக்ட் பண்ணலாம்னு ஐடியா கொடுத்தாங்க. அதுக்கு ஒரு காரணமும் சொன்னாங்க.

Also Read: வாழை படத்தில் பெத்த கோடியை சம்பாரித்த மாரி செல்வராஜ்… இதெல்லாம் நடந்து இருக்கா?

அப்போ எல்லாம் விளம்பரத்துக்கு வினைல் போர்டு கிடையாது. வரையறது தான். டிரெய்ன், மம்பட்டி சின்னங்களை விட இரட்டை இலையை சுவரில வரையறது ரொம்ப ஈசி. ரொம்ப கவர்ச்சியாவும் இருக்கும். அது பார்க்க ஒரு நல்ல இயற்கைக் காட்சியாகவும் இருக்கும்னு சொன்னாரு. உடனே எம்ஜிஆர் அதை ஏத்துக்கிட்டாரு.

இதெல்லாம் இன்னைக்கு யாருக்குமே தெரியாது. எங்க பெரியப்பா தான் இரட்டை இலையை செலக்ட் பண்ணிக்கொடுத்தாருங்கறது தெரியாது. பல விஷயங்கள் இன்னைக்கு மறைக்கப்பட்டுருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts