எம்ஜிஆர் சொன்னதையும் மீறி கல்யாணம் செய்த வாலி!.. கோபத்தில் தலைவர் செய்த செயல்..தன் பாடல் மூலம் பதிலடி கொடுத்த கவிஞர்..
வாலி சினிமாவிற்காக பாடல் எழுத வருமுன் எம்ஜிஆருக்காக எப்படியாவது ஒரு பாடலாவது தன் வரிகளில் எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர் தான் வாலி. அதன் மூலமாகவே அலைந்து திரிந்து அதற்கான வாய்ப்பையும் பெற்றார்.
எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனரான ப. நீலகண்டனின் அறிமுகம் கிடைத்தது வாலிக்கு. எம்ஜிஆரின் அரசியல் எண்ணத்தை தன் பாடல்கள் மூலம் உணர்த்தினார் வாலி. ரசிகர்களும் எப்படியா இவரால மட்டும் நடக்க போறத முன்கூட்டியே அறிந்து கொள்கிறார் என்று வாலியை ஒரு தீர்க்கதரிசியாகவே வர்ணித்தனர். ஒரு சமயத்தில் வாலியே எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞராகவே வலம் வந்தார்.
இதையும் படிங்க :அஜித்திற்கு அரசியல் ஆசையை காண்பித்த ஜெயலலிதா!.. தல சொன்ன பதில் என்ன தெரியுமா?..
அதுவரை கண்ணதாசன் தான் பெரும்பாலான எம்ஜிஆர் படங்களுக்கு பாடல் எழுதி வந்தார். வாலியின் பாடல்கள் எக்குத்திக்கும் பரவியது. எம்ஜிஆருக்கு கோலோச்சிய பாடல்கள் பெரும்பாலும் வாலியால் எழுதப்பெற்றவை. குறிப்பாக நான் ஆணையிட்டால், மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும் போன்ற பாடல்கள் எம்ஜிஆரின் அரசியல் பிரவேசத்தை பறைசாற்றின.
எம்ஜிஆர் மட்டுமில்லாமல் சிவாஜிக்கும் பல பாடல்களை எழுதியுள்ளார். மேலும் நான்கு தலைமுறைகளாக சிம்பு வரை அவரின் வரிகளில் சினிமா இன்பம் கொண்டாடியிருக்கிறது. இப்படி எம்ஜிஆரும் வாலியும் நெருக்கமாக இருக்க ரொம்ப நாளாகவே வாலி கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருந்தாராம்.
ஒரு நாள் எம்ஜிஆர் வாலியிடம் ‘உங்கள் திருமணத்தை நான் தான் நடத்தி வைப்பேன், நீங்கள் பெற்ற பணமும் புகழும் வீணாகக் கூடாது. ஆகவே சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த வாலி ‘உங்களுக்கு தெரியாமல் கல்யாணம் செய்வேனா? கண்டிப்பாக பண்ணுவேன்’ என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திலேயே எம்ஜிஆருக்கு தெரியமாலேயே வாலி திருமணம் செய்து கொண்டாராம். இது எம்ஜிஆருக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே எம்ஜிஆர் வாலியுடன் பேசாமலேயே இருந்தாராம். அப்போது எம்ஜிஆரின் நடிப்பில் தாழம்பூ என்ற படம் தயாராகியுள்ளது.
இதையும் படிங்க : “ரஜினியை கட்டி வச்சி அடிக்கனும்”… ஷூட்டிங்கையே நிறுத்திய தயாரிப்பாளர்… இப்படி எல்லாம் நடந்திருக்கா??
அப்போது திரைப்படம் வினியோகஸ்தரர்கள் இந்த படத்தில் அந்த மூன்றெழுத்து நடிகருக்கு இரண்டெழுத்து கவிஞரின் வரியில் ஒரு பாடல் அமைந்தால் நன்றாக இருக்கும் என கூறியிருக்கின்றனர். அதுவரை பேசாமல் இருந்த எம்ஜிஆர் வாலியின் வீட்டிற்கு காரை அனுப்பி வரவழைத்திருக்கிறார். அதற்கு முன் வாலியின் மனைவியும் ஏங்க இப்படி இருக்கிறீர்கள்? நீங்களாவது பேசலாம்ல? என்றும் சொல்லியும் வாலி நான் என்ன தப்பு பண்ணேன்? கல்யாணம் என் இஷ்டத்துக்கு பண்ணுனது தப்பா? அவரிடம் சொல்லித்தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லையே என்று கருதியே வாலியும் பேசாமல் இருந்திருக்கிறார்.
ஆகவே காரில் வாலி எம்ஜிஆர் வீட்டிற்கு போக எம்ஜிஆர் வாலியிடம் நடந்ததை மறந்து விடும், எனக்காக இந்த படத்தில் ஒரு பாட்டு எழுத வேண்டும் என கேட்டிருக்கிறார். உடனே வாலி தன் எண்ணங்களை பாடல் மூலம் ‘எங்கே போய்விடும் காலம், அது என்னையும் வாழ வைக்கும், கொஞ்சம் இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும்’ என்ற பாடலாகும்.