ஒரு பூச்சிக்காக எம்ஜிஆரின் சூட்டிங்கை கேன்சல் செய்த நடிகை.. இயக்குனரின் சாமர்த்தியத்தால் அசந்து போன புரட்சித்தலைவர்!..
பழம்பெரும் இயக்குனர் ப. நீலகண்டனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் இயக்குனர் அமுதா துரைராஜ். இவர் எம்ஜிஆருக்கு நெருக்கமானவரும் தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பனுக்கு மருமகனும் ஆவார். சினிமா மீதுள்ள மோகத்தால் படிப்பு வேண்டாம் என சென்னைக்கு ஓடிவந்தவர்.
ஆனால் இவரை எம்ஜிஆர் பார்த்து ஒரு லைட் மேனாக இருப்பவரே எட்டாம் வகுப்பு படித்திருக்கிறார்கள். ஆனால் நீ இயக்குனராக வேண்டும் என்று வந்திருக்கிறாய். போய் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வா என்று மறுபடியும் சொந்த ஊருக்கே சென்று படித்திருக்கிறார் அமுதா துரைராஜ்.
எம்ஜிஆர் சொன்னபடி படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு நீலகண்டனிடம் சேர்ந்து பல படங்களில் பணிபுரிய வாய்ப்பு வந்தது. அவரும் செய்தார். ஒரு சமயம் எம்ஜிஆரின் நடிப்பில் ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘இதயக்கனி’ படத்தில் அசிஸ்டெண்ட் இயக்குனராக பண்புரிந்தார் அமுதா துரைராஜ்.
இதையும் படிங்க : சில்க் ஸ்மிதா எந்த நிலைமைல சினிமாவுக்கு வந்தாங்கன்னு தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!..
1975 ஆம் ஆண்டில் இதயக்கனி படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ராதா சலுஜா என்ற நடிகை நடித்திருப்பார். அந்த படத்தில் இதழே இதழே என்ற பாடல் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார்களாம்.அந்த பாட்டுக்கு ஒரு காட்சியில் படுக்கையறையில் மலர்களை தூவி அதன் மேல் படுத்து டூயட் பாடுவது மாறியான காட்சியாம்.
அப்போது மலரிலிருந்து ஒரு வண்டு ராதாவை கடித்து விட சூட்டிங் பேக்கப் என்று சொல்லிவிட்டாராம். உடனே சூட்டிங் கேன்சல் ஆகக்கூடாது என்பதற்காக அங்கிருந்தவர்கள் பலபேர் மறுபடியும் அந்த வண்டு கடித்துவிடக்கூடாது என்பதற்காக தேடிக் கொண்டிருந்தார்களாம். அப்போது புத்திசாலித்தனமாக யோசித்த அமுதா துரைராஜ் வண்டை தேடுவது மாதிரி வெளியே வந்து வெளியே கிடந்த ஒரு சிறிய கரப்பான்பூச்சியை மலரிலிருந்து எடுத்துவிட்டேன் என்று பொய் சொல்லி அந்த நடிகையை நம்ப வைத்திருக்கிறார்.
ஆனால் இதை நம்பாத எம்ஜிஆர் நேராக அமுதா துரைராஜிடம் வந்து ஒழுங்கா சொல்லிடு, இந்த பூச்சியை எங்கு இருந்து கொண்டு வந்தாய் என்று கேட்டதுடன் நீ சினிமாவிற்கு சரியான ஆளுதான் என்றும் பாராட்டினாராம்.