இந்த படத்தை எடுத்து நீங்களா?.. இயக்குனரின் முதல் படத்தை பாராட்டி எம்.ஜி.அர் சொன்ன இரண்டு வார்த்தை..

by சிவா |
இந்த படத்தை எடுத்து நீங்களா?.. இயக்குனரின் முதல் படத்தை பாராட்டி எம்.ஜி.அர் சொன்ன இரண்டு வார்த்தை..
X

சில இயக்குனர்கள் முதல் படத்திலேயே ஆச்சர்யப்படுத்தி விடுவார்கள். முதல் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியானதுமே அது சில தயாரிப்பாளரை கவர்ந்துவிடும். செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தை டிரெய்லரை பார்த்ததுமே அவருக்கு பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அட்வான்ஸ் கொடுத்தார். இப்படி பல இயக்குனர்களுக்கு நடக்கும். சில இயக்குனர்கள் முதல் படத்திலேயே கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால், அவர்களில் சிலருக்கு மட்டுமே இரண்டாம் வாய்ப்பு கிடைக்கும். அப்படி பல இயக்குனர்கள் டேக் ஆப் ஆகி மேலே வந்திருக்கிறார்கள்.

80களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஆர்.சுந்தரராஜன். கோவையை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களை இயக்கியுள்ளார். மோகன், விஜயகாந்த் ஆகியோரை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். விஜயகாந்தை வைத்து வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

sundar

sundar

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய முதல் திரைப்படம் ‘பயணங்கள் முடிவதில்லை’. இந்த படத்தில் மோகன் ஹீரோவாக நடித்திருந்தார். பூர்ணிமா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எப்போதும் எவர்கிரீன் ஹிட்டாக இருக்கிறது.

mgr

mgr

இந்த படத்தை அப்போது மோகனை வைத்து பல வெற்றிப்படங்களை தயாரித்த கோவைத்தம்பி தயாரித்திருந்தார். இந்த படம் தயாரானதும் எம்.ஜி.ஆருக்கு போட்டு காட்டாமல் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என நினைத்த அவர் எம்.ஜி.ஆருக்காக காத்திருந்தார். ஒருவழியாக எம்.ஜி.ஆரும் நேரம் ஒதுக்கி இப்படத்தை பார்த்தாராம். படம் முடித்து வெளியே வந்த போது அங்கு அவருக்காக காத்திருந்த சுந்தரராஜனை பார்த்துவிட்டு ‘நீங்களா இயக்குனர்?’ என நம்பவில்லையாம். ஏனெனில், அனுபவமிக்க ஒரு வயதான இயக்குனர் இயக்கியிருப்பார் என எம்.ஜி.ஆர் நினைத்துள்ளார்.

payangal

ஆனால், இளைஞனாக சுந்தர்ராஜன் நிற்பதை பார்த்து ஆச்சர்யப்பட்ட எம்.ஜி.ஆர் அவரின் தோளில் தட்டிக்கொடுத்து ‘ஆக்கப்பூர்வமான பணி.. அமோக வெற்றி’ என சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது போலவே இந்த படம் அமோக வெற்றியை பெற்றது. சென்னையில் அப்போது இருந்த லிட்டில் ஆனந்த் எனும் தியேட்டரில் மட்டும் இப்படம் 550 நாட்கள் ஓடியது. அதன்பின் அதே மோகனை வைத்து ஆர்.சுந்தரராஜன் குங்கும சிமிழ், மெல்ல திறந்தது கதவு ஆகிய படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தகக்து.

Next Story