தமிழ் சினிமாவில் 40களில் தன் கால்தடத்தை ஊன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் தன் அன்பால் கட்டிப்போட்டு வைத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி இவரிம் ஆதிக்கம் கொஞ்சம் ஓங்கி தான் இருந்தது. அதற்கு காரணம் மக்கள் மீது இவர் காட்டிய அன்பு மற்றும் அக்கறை தான்.
அது தான் அவரை ஒட்டுமொத்த தமிழத்தையும் ஆளவைத்தது. உதவி என்று வருவோர்க்கு முடியாது என்ற சொல்லை ஒரு போதும் பயன்படுத்தாதவர். இப்படி அவர் வறுமையில் இருக்கும் போதே அவரது அன்னை அந்த அளவுக்கு நல்ல விஷயங்களை ஊட்டி வளர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் எம்ஜிஆரை பற்றி பிரபல பெண் இயக்குனர் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. அந்தக் காலங்களில் காலத்தால் அழியாத பல படைப்புகளை ரசிகர்களுக்காக வாரி வழங்கிய
இயக்குனரான பி.ஆர்.பந்த்லுவின் மகளான பி.ஆர்.விஜயலட்சுமி தான்.
இவரு ஒரு இயக்குனர் தான். அதையும் தாண்டி ஆசியக் கண்டத்திலேயே முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையையும் வைத்துக் கொண்டவர். பி.ஆர்.விஜயலட்சுமியும் நடிகை சுஹாசினியுன் ஒன்றாக ஒரே நேரத்தில் தன் பணியை ஆரம்பித்தவர்களாம். உதவி ஒளிப்பதிவாளராக இருந்த இவர்கள் திடீரென் சுஹாசினி நடிப்பில் வாய்ப்பு வர அவர் நடிப்பின் மீது தன் கவனத்தை திருப்பிவிட்டாராம்.
ஆனால் பி.ஆர்.விஜயலட்சுமி தொடர்ந்து உதவி ஒளிப்பதிவாளராக இருந்து இன்று ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராக மாறியிருக்கிறார். அவர் பணியாற்றிய முதல் படம் பாக்யராஜின் ‘சின்னவீடு’ திரைப்படம் தான். இவர் தான் எம்ஜிஆரை பற்றி தனது சிறு வயதுநியாபகங்களை தற்போது ஒரு பேட்டியின் போது தெரிவித்திருக்கிறார்.
பி.ஆர்.பந்த்லு படப்பிடிப்பு சமயத்தில் பி.ஆர்.விஜயலட்சுமியும் செல்வாராம். அப்போது அவருக்கு பால்ய வயசு தான் இருக்கும். அப்போது எம்ஜிஆர் வருவாராம். வந்து பி.ஆர்.விஜயலட்சுமியிடம் ‘என்னை நீ கல்யாணம் பண்ணிகிறியா’ என்று கேட்பாராம். அதை கேட்டதும் விஜயலட்சுமி ஓட்டம் பிடித்து விடுவாராம்.
இதையும் படிங்க : சொந்தமாக கோயில்களை கட்டி புண்ணியம் தேடிய நடிகர்கள்!.. இவர்களின் லிஸ்டில் மற்றுமொரு வில்லன் நடிகர்..
அதே போல் நம்பியாரும் இவரை பார்த்தாலே ஒரே பொது அறிவு கேள்விகளாக கேட்பாராம். ஆனால் விஜயலட்சுமிக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாதாம். பக்கத்தில் பி.ஆர்.பந்த்லுவும் இருப்பதால் விஜயலட்சுமிக்கு நம்பியார் மீது ஆத்திரமாக வருமாம். ஏனெனில் தன் அப்பா முன்னாடியே இப்படி கேள்விகளை கேட்டு கொள்றாரே என்று தோன்றுமாம். இதை ஒரு பேட்டியின் போது பி.ஆர்.விஜயலட்சுமியே கூறினார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…