Cinema History
சந்திரபாபு படத்திலிருந்து ஏன் விலகினேன் தெரியுமா?!- நடிகையிடம் எம்.ஜி.ஆர் பகிர்ந்த அந்த ரகசியம்….
ஹுஊருக்கு உழைப்பவன் என்ற படத்திற்காக வெண்ணிறாடை நிர்மலாவும் எம்ஜிஆரும் ஹைதராபாத்திற்கு சென்று இருக்கிறார்கள். இடைவேளை நேரத்தில் எம்ஜிஆர் நிர்மலாவிடம் ‘நீ ஏதாவது ஒரு படம் எடு நான் உனக்கு உதவுகிறேன்’ என்று சொன்னாராம். ஏற்கனவே ‘அவளுக்கு நிகரானவன்’ என்ற படத்தை எடுத்து நஷ்டத்தில் இருந்த நிர்மலா எம்ஜிஆர் சொன்னதும் கொஞ்சம் தயங்கி இருக்கிறார்.
அன்றைக்கு உள்ள காட்சிகளை எல்லாம் எடுத்து முடித்த நிலையில் அனைவரும் அங்குள்ள ஹோட்டலில் உள்ள ரூமில் தங்கி இருந்தார்களாம். அப்போது சில ஊழியர்கள் நிர்மலாவை பார்க்க வந்திருக்கிறார்கள். நிர்மலாவிடம் “தயவு செய்து எம்ஜிஆரை வைத்து படம் எடுக்காதீர்கள். இருக்கிற பணமெல்லாம் போய்விடும். நீங்கள் பெரும் நஷ்டத்தை தான் அடைவீர்கள்” என்று ஒரு நான்கு ஐந்து பேர் மாறி மாறி வந்து சொல்லி இருக்கிறார்கள்.
பெண்களால் ஏற்பட்ட நட்பு
மேலும் ‘சந்திர பாபு எம்ஜிஆரை வைத்து படம் எடுத்ததனால் தான் அவர் இந்த அளவு நஷ்டத்தை அடைந்தார். லட்சாதிபதியாக வாழ்ந்த சந்திரபாபு எம்.ஜி.ஆரால் தான் பிச்சாதிபதி ஆனார்’ என்றும் கூறி இருக்கிறார்கள். இதை எம்ஜிஆரிடமே நிர்மலா போய் கேட்டிருக்கிறார். அதற்கு எம்ஜிஆர் “சந்திரபாபு என்னை வைத்து படம் எடுத்தது உண்மைதான். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் இருந்த சில பெண்களிடம் சந்திரபாபு தவறான முறையில் நெருக்கம் காட்டி வந்தார். நான் அவரை கண்டித்தேன். ஆனால் அதற்கு சந்திரபாபு என்னை தேடி வருபவர்களை நான் தடுக்க முடியாது. நான் என்ன புத்தனா? நான் இப்படித்தான் இருப்பேன்” என்று கூறினார்.
எம்ஜிஆரின் பெருந்தன்மை
அதனால் நான் நடிச்ச படத்தால் தான் இந்த அளவு ஒரு நெருக்கம் போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இருந்து விலகினால் இந்த பழக்கம் நின்றுவிடும் என்ற காரணத்தில் தான் நான் வெளியே வந்தேன்’ என்று எம்ஜிஆர் கூறினாராம். அதற்கு நிர்மலா “இதை நீங்கள் பத்திரிக்கையாளர்களிடம் சொல்லி இருக்க வேண்டியதுதானே? இப்பொழுது உங்களைப் பற்றி தானே தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு எம்ஜிஆர் “எனக்கும் ஒரு ஆணுக்கும் உள்ள பிரச்சினை என்றால் நான் சொல்லியிருப்பேன். இதில் சம்பந்தப்பட்டது சில பெண்களும் கூட. இந்த ஒரு செய்தியால் அந்தப் பெண்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் தான் நான் இதை வெளியே சொல்லவில்லை” என்று கூறினாராம். இதை குறிப்பிட்டு பேசிய நிர்மலா தன்னுடைய பெயர் கெட்டாலும் பரவாயில்லை என்பதைப் பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்களின் நலனுக்காகவே வாழ்ந்தார் எம்.ஜி.ஆர் என்று ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : வாழ்த்து சொன்னது போதும் ஓடு பக்கி!.. வடிவேல் ஸ்டைலில் விரட்டிய இளையராஜா (வீடியோ)..