இனிமே என்னை பார்க்க வராதீங்க!..ஏவிஎம் சரவணனை திருப்பி அனுப்பிய எம்ஜிஆர்!..காரணம் இதுதான்!...
பல நிறுவனங்களுக்கு படங்கள் நடித்து கொடுத்த எம்ஜிஆர் ஏவிஎம் நிறுவனத்திற்கு படங்கள் செய்யமுடியாத நிலையே இருந்தன. ஒரு காலத்தில் அவர் நடிப்பில் வந்த எங்க வீட்டு பிள்ளை படத்தின் வெற்றி ஏவிஎம் நிறுவனத்தின் சகோதரர்களை தூண்டி விட்டது. அடுத்ததாக கண்டிப்பாக எம்ஜிஆரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது.
இந்த எண்ணத்தை தன் தந்தையார் மெய்யப்பச்செட்டியாரிடம் தெரிவித்தனர்.அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்க அதன் பின் உருவான படம் தான் ‘அன்பே வா ’ திரைப்படம். ஏவிஎம் நிறுவனத்தால் கலரில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக இந்த படம் அமைந்தது. மேலும் எம்ஜிஆர் வெளியூரில் பாடல் காட்சிகளை நடத்த விரும்பப்பாட்டாராம். பெரும்பாலும் ஸ்டூடியோவில் தான் நடத்த விரும்புவாராம்.
ஏனெனில் வெளியூர் என்றால் மக்கள் வந்து பார்ப்பார்கள்.அவர்கள் முன்னிலையில் மாஸ்டர் அவருக்கு டான்ஸ் சொல்லித்தருவதை விரும்ப மாட்டாராம் எம்ஜிஆர். இப்படி படம் ஒரு வழியாக போய்க் கொண்டிருக்க சின்னப்பத்தேவர் ஃபிலிம்ஸ்க்காக ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட எம்ஜிஆரை பார்க்க சென்றாராம் ஏவிஎம் சரவணன். பெரும்பாலும் மற்ற தயாரிப்பாளர் படப்பிடிப்பில் எம்ஜிஆர் இருந்தால் சரவணன் போகமாட்டாராம். சின்னப்பத்தேவர் என்பதாலேயே போனாராம்.
இது வழக்கமாக நடைபெறும் சந்திப்பும் கூட. ஆனால் அன்றைக்கு சரவணனை எம்ஜிஆர் இனிமேல் என்னை பார்க்க வரவேண்டாம். வேண்டுமென்றால் ஸ்டூயோவிற்கு நானே வருகிறேன் இல்லையென்றால் தோட்டத்தில் வந்து சந்தியுங்கள் என்று கூறி காரணத்தையும் சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நீங்கள் அடிக்கடி வருவதை பார்க்கும் மற்றவர்கள் ஏவிஎம் நிறுவனத்திற்கு எம்ஜிஆர் கால்ஷீட் கொடுக்க வில்லை போல என தவறாக எண்ணி விடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்.