More
Categories: Cinema History Cinema News latest news

எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடல் வரி சொன்ன கருணாநிதி!.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?….

எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமான ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. அதன்பின் அவர் நடித்த மந்திரகுமாரி உள்ளிட்ட சில படங்களுக்கு கருணாநிதியே வசனம் எழுதினார்.

எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் அரசியலில்தான் எதிரிகளாக இருந்தனர். ஆனால், திரையுலகில் இருவரும் வளரும்போது நல்ல நண்பர்களாகவே இருந்துள்ளனர். எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கு அசத்தலான வசனங்களை கருணாநிதி எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் நடிகராகவும், கருணாநிதி கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக ஒன்றாகவே வளர்ந்துள்ளனர்.

Advertising
Advertising

அதேபோல், எம்.ஜி.ஆருக்கு பல அசத்தலான பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்துக்காக அவர் பாட்டு எழுதி கொண்டிருந்தார். முதல் வரி ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என அமைந்துவிட்டது. அடுத்த வரி என்ன எழுதுவது என வாலி யோசித்துக்கொண்டிருக்க அங்கு வந்த கருணாநிதி ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என அடுத்த வரியை சொன்னாராம்.

mgr

அந்த வரி எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போய் வாலியை பாராட்ட வாலியோ ‘அது கலைஞர் சொன்னது’ என சொல்ல, அதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான ‘நான் செத்து பிழைச்சவண்டா’ பாடலில், கருணாநிதி இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து போராட்டம் நடத்தியதை எம்.ஜி.ஆர் சேர்க்க சொல்லியிருக்கிறார். எனவே ‘ஓடும் ரயிலை இடை மறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து.. அதன் பாதையில் தனது தலை வைத்து.. உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது’ என வாலி எழுதியிருப்பார்.

அதாவது தன்னை பாராட்டி எழுதிய கலைஞர் கருணாநிதி அதே படத்தில் பாராட்டி பாட்டு வைத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

Published by
சிவா

Recent Posts