ஜெயலலிதாவுடன் தொடர்ந்து ஜோடிப் போட்டு வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் அந்த ஜோடி ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய் விட்டதாக ஃபீல் செய்துக் கொண்டிருந்தார். ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பல்பு வாங்க தொடங்கிய நிலையில், ரிக்ஷாக்காரன் படத்தில் மஞ்சுளாவை அறிமுகப்படுத்தி தேசிய விருதையே தட்டிச் சென்றார்.
அதே போலத்தான், இளம் நடிகை லதாவை அறிமுகப்படுத்தி உரிமைக்குரல் உள்ளிட்ட படங்களை வெளியிட்டு மாஸ் காட்டி வந்தார். ஆனால், திடீரென ரஜினிகாந்தின் பார்வை லதா மீது பட்ட நிலையில், அவருக்கு ஜோடியாக மாறினார் லதா. இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கவும் ஆரம்பித்ததாக தகவல்கள் பரவின.
இதையும் படிங்க: இசைஞானி – ரஜினி கூட்டணி ஏன் மீண்டும் சேரல தெரியுமா?-வாய்க்கால் தகராறை விட பெருசா இருக்கும் போலயே!..
ஹோட்டல் குருவில் நடந்த சம்பவம்:
கோயமுத்தூரில் உள்ள ஹோட்டல் குருவில் ரூம் போட்டு நடிகை லதாவுடன் ரஜினிகாந்த் தங்கியுள்ளதாகவும் ரகசியமாக திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் எம்ஜிஆருக்கு சென்ற தகவலால் மனுஷன் கடுப்பாகி அந்த ஹோட்டலுக்கே சென்று ரஜினிகாந்தை கட்டி வைத்து உதைத்தத சம்பவம் தான் அப்போது சினிமா வட்டாரத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக பழம்பெரும் சினிமா பிரபலம் காந்தாராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
மனநோயாளியான ரஜினிகாந்த்:
இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக அன்னை ஓர் ஆலயம் படம் ஷூட்டிங் ஊட்டியில் நடந்துக் கொண்டிருந்த போது கேமராக்களை எல்லாம் அடித்து நொறுக்கி படக்குழு சென்னைக்கே திரும்ப காரணமாக ஒரு மனநோயாளி போல நடந்துக் கொண்டதாக அப்போதே பத்திரிகைகள் எழுதின.
சுமார் 6 மாத காலம் அந்த சம்பவத்தில் இருந்து எஸ்கேப் ஆக மனநோயாளி போலவே நடித்தார் ரஜினிகாந்த் என்றும் ஆரம்பத்தில் எம்ஜிஆர், ரஜினிக்கு இடையே பிரச்சனை என்று மட்டும் தான் தெரியும் என்றும் பின்னர் தான் அதற்கு பின்னணியில் நடிகை லதா இருந்தது தெரிய வந்தது என காந்தாராஜ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மூன்று முகம் வில்லன் நடிகர் செந்தாமரையை ஞாபகம் இருக்கா?.. யாருக்கும் தெரியாத அவரது காதல் கதை இதோ!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…