தலைவரிடமே ஆட்டம் காண்பித்த ஸ்ரீதர்!.. விருந்தும் கொடுத்து சவால் விட்ட எம்ஜிஆர்!..

by Rohini |   ( Updated:2022-12-31 10:48:40  )
mgr_main_cine
X

mgr

தமிழ் சினிமாவின் அந்த காலங்களில் வசீகரிக்கும் அழகில் இருக்கும் இயக்குனர் ஸ்ரீதர். இவரின் இயக்கத்தில் பல அழகான காதல் படங்களும் கமெர்ஷியல் படங்களும் வெளிவந்து வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் தான் இருந்திருக்கின்றனர்.

அந்த அளவுக்கு பெண்களுக்கு பிடித்தமான இயக்குனராகவே வலம் வந்திருக்கிறார் ஸ்ரீதர். இவரின் படைப்புகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை சொல்லலாம். 60க்கும் மேற்பட்ட படங்களை எடுத்துள்ள ஸ்ரீதர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.

mgr1

sridhar

ஸ்ரீதர் எம்ஜிஆரை வைத்து இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். அதில் முக்கியமான படம் என்னவென்றால் உரிமைக்குரல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். மேலும் நடிகை அஞ்சலி தேவி, வி,எஸ்.ராகவன், எம்.என். நம்பியார் உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : எம்ஜிஆராவது பயமாவது.. துணிச்சலாக வந்த ஜெய்சங்கர்!.. அடடா இப்படி பண்ணிட்டாரே?..

இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் எம்ஜிஆர் விருந்து ஒன்று கொடுத்தாராம். விருந்தின் போதே ஒரு சவாலையும் வைத்தாராம். ஏனெனில் அப்போது தான் சுவாரஸ்யமாக இருக்கும் என கருதி சவால் ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது யார் அதிகமாக பாயாசம் சாப்பிடுகிறார்களோ அவர்களை விட ஒரு டம்ளர் அதிகமாக நான் பாயாசம் சாப்பிடுகிறேன் என்று கூறியிருந்தாராம்.

mgr2

mgr2

விருந்து சாப்பிட்டவர்கள் சில பேரில் 4 டம்ளருக்கு மேல் தாக்குப் பிடிக்காமல் நிறுத்திவிட்டனராம். ஆனால் ஒருவர் மட்டும் 12 டம்ளர் பாயாசம் சாப்பிட எம்ஜிஆரின் சவால் படி கூடுதலாக 13 டம்ளர் பாயாசம் சாப்பிடவேண்டும். எம்ஜிஆர் குடித்துக்கொண்டே இருக்க இதை பார்த்துக் கொண்ட ஸ்ரீதர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எம்ஜிஆருக்கு எதாவது ஆகிவிடுமோ?

இதையும் படிங்க : கமல்ஹாசனுக்கு போட்டியாக ஒரு குட்டி குழந்தைக்கு கட் அவுட் வைத்த தயாரிப்பாளர்… இப்படி ஒரு புரோமோஷனா??

அதனால் படப்பிடிப்பும் நின்று விடுமோ என்று நினைத்து பாயாசம் ஊற்றிக் கொடுத்த்வரை பார்த்து ஸ்ரீதர் கண்ணசைத்து குறைவாக ஊற்றிக் கொடுக்க சொல்லியிருக்கிறார். ஆனால் டம்ளரில் குறைவாக இருப்பதை அறிந்த எம்ஜிஆர் நிறை நிறையாக கொடு என்று அந்த சவாலிலும் நியாயமாக நடந்து rகொண்டுள்ளார். எதிலும் எப்பவும் நியாயமாகவும் முறைப்படியாகவும் இருப்பதால் தான் சிறந்த தலைவராகவும் இருக்க முடிந்தது.

Next Story