Connect with us

Cinema History

எனக்கு மட்டும் நான்-வெஜ், தொழிலாளர்களுக்கு வெறும் முட்டையா..? ஷூட்டிங்கில் மல்லுக்கு நின்ற எம்.ஜி.ஆர்..!

MGR: தமிழ் சினிமா இப்படி ஒரு நடிகரை இனி பார்க்கவே முடியாது என்பதற்கு உதாரணமாக இருப்பவர் எம்.ஜி.ஆர் தான். அவர் எப்போதுமே தான் மட்டும் உயர வேண்டும் என நினைத்ததே இல்லை. தன்னை சுற்றி இருக்கும் கூட்டத்தையும் உயரத்துக்கு அழைத்து செல்லவே விரும்புவார்.

அதே வேளையில் தன்னை வைத்து எதுவும் பாலிடிக்ஸ் செய்தால் அவருக்கு கெட்ட கோபம் வந்து விடும். அதுவும் தன் சக தொழிலாளிக்கு நடந்தால் அவரின் ருத்ர தாண்டவம் தான் அங்கு நடக்கும் அப்படி ஒரு சம்பவம் அவர் நடிப்பில் வெளியான உழைக்கும் கரங்கள் படத்தில் நடந்து இருக்கிறது.

இதையும் படிங்க: இதையும் படிங்க: எட்டே படம்… கோடீஸ்வர அப்பா.. வெளியில் தெரியாத குடும்ப விவரம்… காணாமல் போன ஹீரோ..! ஆச்சரிய தகவல்..!

இப்படத்தின் ஷூட்டிங்கில் எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையாக அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவும் அவருக்கு தனியாக பரிமாறப்படுமாம். ஆனால் படத்தில் பணியாற்றியவர்களுக்கு சுமாரான சாப்பாடு கூடவே ஒரே ஒரு முட்டை மட்டுமே வைப்பார்களாம். 

இதை தாங்க முடியாதவர்கள் படப்பிடிப்பிலேயே எம்.ஜி.ஆரிடம் இந்த விஷயத்தினை சொல்லிவிட்டனர். இதை கேட்ட எம்.ஜி.ஆருக்கு செம கோபமே வந்துவிட்டதாம். ஆனால் அதையும் பக்குவமாக கையாள நினைத்தவர். நான் பார்த்துக் கொள்கிறேன் என அனைவரும் அனுப்பி வைத்தாராம்.

அடுத்த நாள் சாப்பிடும் நேரம் வர, யூனிட் ஆட்களுடன் எம்.ஜி.ஆரும் வந்து அமர்கிறார். இதை கண்ட உணவு பரிமாறுபவர்களுக்கு ஷாக் ஆகிவிட்டது. ஐயா நீங்க உள்ளே சாப்பிடலாமே எனக் கேட்க எல்லாம் ஒரே சாப்பாடு தானே இங்கையே சாப்பிடுறேன் என லாக் கொடுக்கிறார்.

இதையும் படிங்க: காலையில் ப்ரோபோஸ் செய்தவருடன் மாலையில் திருமணம் செய்து கொண்ட ரஜினி மகள்… அட சுவாரஸ்யமால இருக்கு..!

வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்படுகிறது. முட்டை தவிர வேறு அசைவம் எதுவும் வராமல் போக எம்.ஜி.ஆர் விஷயம் உண்மை என்பதை புரிந்து கொள்கிறார். ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. உங்க ரூமில் இருக்கு என்கின்றனர்.

சரி யூனிட் ஆட்களுக்கு எங்க எனக் கேட்டாராம். அவர்களுக்கு முட்டை தான் என்பதை திணறி திணறி சொல்லி இருக்கின்றனர். இதனால் கொதித்த எம்.ஜி.ஆரி சாப்பாட்டில் பாகுபாடு காட்டுறீங்க? அவங்க தான் அதிக வேலை செய்றாங்க. அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. 

உங்களால முடியலைனா. என் காசுல போடுங்க. அதுக்காக ஆகும் தொகையை என் சம்பள பணத்தில் இருந்து எடுத்துக்கோங்க என கறாராக சொல்லிவிட்டாராம். இதையடுத்து யூனிட் ஆட்களுக்கு சரியாக சாப்பாடு வந்ததாக கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top