More
Categories: Cinema History latest news

எனக்கு குழந்தை பிறந்ததும் எம்.ஜி.ஆர் என்ன பண்ணாருனு தெரியுமா…? ரகசியத்தை பகிர்ந்த பிரபல நடிகர்…

தமிழ் தலைசிறந்த சிகரமாக விளங்கியவர் நடிகர் எம்.ஜி.ஆர். அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் இவர் காட்டிய ஆர்வம் சொல்லிடங்கா. இரண்டிலும் மக்களுக்காக என்ற கொள்கையை குறிக்கோளாகக் கொண்டவர் எம்.ஜி.ஆர். நடிக்கும் போதே மக்கள் பலத்தை வைத்துக் கொண்டு அரசியலுக்குள் நுழைந்தவர்.

Advertising
Advertising

அதனாலயே அரசியல் செல்வாக்கு அதிகரித்தது. அரசியலில் முழு ஆர்வம் காட்டிய பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். மேலும் அடுத்த தலைமுறைகளுக்கு உந்துதலாக விளங்கினார். ஏராளமான திரைப்பிரபலங்களுடன் நெருங்கி பழகுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்படி பட்ட ஒருவர் தான் நடிகர் பாண்டியராஜன். அவர் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் தான் தலைமை தாங்கினாராம். மேலும் அவரிடம் பாண்டியராஜன் நடித்த ஆண்பாவம் படத்தை பார்க்கவேண்டுமென்றும் கூறியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்கள் : தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனர்.. சாதனை பெண்ணின் வியக்கவைக்கும் வரலாறு..

அதன் பிறகு பாண்டியராஜனுக்கு குழந்தை பிறந்த சமயம் பாண்டியராஜன் எல்லாருக்கும் தொலைபேசியில் அழைத்து குழந்தை பிறந்த செய்தியை தெரிவித்திருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு சொல்லவில்லை. ஆனால் புரட்சிக்கலைஞரோ பத்திரிக்கையில் வந்த செய்தியை பார்த்து பாண்டியராஜனுக்கு அவரே போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் உனக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆச்சுனு கேட்டாராம். அதற்கு பாண்டியராஜன் 10 மாதம் என்றவுடன் இந்த அவசரம் வேலைகளிலும் இருக்கனும் என்று தமாசா கூறியதாக பாண்டியராஜன் தெரிவித்தார்.

Published by
Rohini