More
Categories: Cinema History Cinema News latest news

ஒரே வசனம்!.. வசனகர்த்தாவுக்கு வீடு வாங்கி கொடுத்த எம்.ஜி.ஆர்.. அவர் யார் தெரியுமா?…

திரைப்படத்திற்கு வசனம் என்பது முக்கியம். இப்போது பல காட்சிகளையும் விஸ்வலாக காட்டி விடுகிறார்கள். அனால், 50,60களில் அப்படி இல்லை. நாடகத்திலிருந்து சினிமா வந்ததாலும், பெரும்பாலான நாடக நடிகர்களே சினிமாவில் நடித்ததாலும் அதிக வசனங்கள் பேசித்தான் நடிப்பார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட வசனங்களுக்கு வசனகர்த்தா பக்கம் பக்கமாக வசனம் எழுதுவார். நடிகர்கள் அதை மனப்பாடம் செய்து மணிக்கணக்கில் பேசுவார்கள். கலைஞர் கருணாநிதி எழுதிய பராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அப்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வசனத்தின் வீரியத்தை எல்லோரும் உணர்ந்தனர். எம்.ஜி.ஆருக்கும் ராஜகுமாரி, அபிமன்யூ, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்களுக்கு கருணாநிதி வசனம் எழுதியுள்ளார்.

Advertising
Advertising

இப்போது நடிகர்களை வைத்தே படம் ஓடுவது போல அப்போது வசனங்களை வைத்துதான் ஒரு படத்தின் வெற்றியே நிர்ணயிக்கப்படும். எனவே, வசனங்களை கவனமாக எழுதுவார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா நடித்து 1965ம் வருடம் வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் நம்பியார் வில்லனாக நடித்திருப்பார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’ என்கிற வசனம் இப்போது திரைப்படங்களில் வசனமாகவும், மீம்ஸ்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என எம்.ஜி.ஆரிடம் நம்பியார் கோபமாக கத்த எம்.ஜி.ஆரோ ‘சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப்போகும்’ என பதில் சொல்வார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த வசனம் இது.

இந்த வசனங்களை எழுதியவர் ஆர்.கே.சண்முகம். இந்த படத்தின் வசனங்கள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துபோனதால் தான் நடித்த 16 படங்களுக்கு சண்முகத்தை வசனம் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர். அதோடு, சென்னை லாய்ட்ஸ் சாலையில் அவருக்கு ஒரு புதிய வீடும் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா

Recent Posts