எம்.ஜி.ஆர் கொடுத்தது தெரியும்… கையேந்தி உணவு வாங்கியது தெரியுமா?.. அதுவும் எதற்கு தெரியுமா?…

Published on: June 24, 2023
mgr
---Advertisement---

எம்.ஜி.ஆர் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் வள்ளல் என்பதுதான். அவரிடம் சென்று யார் என்ன உதவி கேட்டாலும் அவரால் முடிந்ததை செய்து கொடுப்பார். திரையுலகினருக்கு மட்டுமல்ல. சாதாரண மக்களுக்கும் அவர் பல உதவிகளை செய்துள்ளார்.

குறிப்பாக அவர் முன் யாரும் பசியாக இருக்கக் கூடாது என நினைப்பார். எப்போது யாரை பார்த்தாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி ‘சாப்பிட்டீர்களா?’ என்பதுதான். அதேபோல், அவர் வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட்டு போக சொல்வார். அவர் வீட்டில் 24 மணி நேரமும் சமையல் வேலை நடந்து கொண்டே இருக்கும்.

mgr

ஆனால், அவரே ஒருமுறை கையேந்தி சாப்பாடு வாங்கி சாப்பிட்ட சம்பவம் நடந்தது. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பல காட்சிகள் கோவாவில் படம்பிடிக்கப்பட்டது.

நடுக்கடலிலும், ஒரு தீவிலும் பல காட்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது படக்குழுவினருக்கு தினமும் கரையில் இருந்து உணவு வரும். ஒருநாள் படகில் அப்படி உணவு கொண்டு வரும்போது அலை வேகமாக அடித்ததில் கொஞ்சம் உணவு, உணவு சாப்பிடும் தட்டு, இலைகள் உள்ளிட்ட சில பொருட்கள் கடலில் விழுந்துவிட்டது.

ayirathil

உணவு கொண்டு வந்தவர்கள் எம்.ஜி.ஆரிடம் போய் இதை தயங்கி தயங்கி கூறியுள்ளனர். இலை இல்லாமல் எப்படி சாப்பிட முடியும் என படக்குழுவினர் கோபத்தில் அமர்ந்திருந்தனர். உடனே எம்.ஜி.ஆர் எல்லா உணவையும் ஒன்றாக கலக்கி கலவை சாதம் போல் செய்ய சொன்னார். அதன்பின் எல்லோரையும் வரிசையில் நிற்க சொல்லிவிட்டு அவரே முதல் ஆளாக போய் கையேந்தி அவருக்கான உணவை வாங்கி கொண்டார். ‘எம்.ஜி.ஆரே கையால் வாங்கும்போது நமக்கு என்ன?’ என எல்லோரும் கையாலேயே உணவை வாங்கி சாப்பிட்டார்களாம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.