யாரும் வந்து ஈஸியா நடிச்சிட முடியாது!..கலைஞர் போட்ட திட்டத்தை தவிடு பொடியாக்கிய எம்ஜிஆர்!..
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகராக திகழ்ந்தவர் புரட்சிக்கலைஞர் எம்ஜிஆர். நாடகங்களில் தன் திறமையை நிலை நிறுத்தி சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் நடிக்க வந்தார் எம்ஜிஆர். இவரும் சரி இவரது அண்ணனான எம்ஜி.சக்கரபாணியும் சரி நடிப்பால் மிரள வைத்தனர். அண்ணன் மீது அலாதி அன்பு கொண்டவர் எம்ஜிஆர்.
அரசியலில் இரு துருவங்கள்
சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் எம்ஜிஆர். நடிக்கும் போதே மக்கள் நலனில் அக்கறை கொண்டவரான எம்ஜிஆர் குடிப்பழக்கம், சூதாட்டம், போன்ற வன்முறையை தூண்டும் காட்சிகளை தான் நடிக்கும் தவிர்த்து வந்தார். இதனாலேயே மக்கள் அன்பை அதிகமாக பெற்றார். நடிக்கும் போதே அண்ணாவின் பற்றால் அரசியலிலும் ஆர்வம் பிறந்தது.
ஒரு பக்கம் கலைஞர் கருணாநிதியும் பல படங்களுக்கு கதை, வசனம் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவரின் வசனத்தில் இன்றளவும் பேசப்படும் படமாக கருதப்படுவது சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த பராசக்தி படம் தான். இவருக்கும் அரசியலில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. ஆனால் இருவருமே அரசியலுக்குள் வருவதற்கு முன் நெருங்கிய நண்பர்களாக தான் இருந்தார்கள்.
இதையும் படிங்க : ஏன் சிங்கம் படம் வெற்றி பெற்றது தெரியுமா? டைரக்டர் ஹரியின் மாஸ் பார்முலாக்கள்… குட்டி ரீகேப்…
பிளவு
1972 ஆம் ஆண்டு வாக்கில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயம். அதற்கு முன்னரே எம்ஜிஆருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் தான் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் இடையே சில உரசல்கள் இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு இருந்தனர்.
எம்ஜிஆருக்கு எதிராக கலைஞர் தீட்டிய திட்டம்
இந்த பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு கலைஞர் தன்னுடைய மூத்த மகனான மு.க.முத்துவை நடிக்க வைக்க எண்ணினார். ஏனெனில் மு.க.முத்து பார்ப்பதற்கு அச்சு அசலாக எம்ஜிஆர் போன்றே இருப்பவர். மேலும் மு.க.முத்துவும் எம்ஜிஆரின் தீவிர ரசிகரும் கூட. சொல்லப்போனால் கலைஞரை விட எம்ஜிஆரை தான் மு.க.முத்துவிற்கு பிடிக்குமாம்.
இதனால் அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிப்பில் கலைஞர் வசனத்தில் மு.க.முத்து நடிக்க லட்சுமி நாயகியாக இணைய ‘பிள்ளையோ பிள்ளை’ என்ற படத்தை எடுக்கிறார் கலைஞர். அந்த பட சூட்டிங்கிற்கு எம்ஜிஆர் தான் க்ளாப் அடித்து துவக்கி வைக்க வந்தவருக்கு ஆச்சரியம்.
ஆச்சரியத்தில் திகைத்த எம்ஜிஆர்
படப்பிடிப்பில் தன்னை போன்ற தோற்றம், முடி, உடை, பாவனையுடன் ஒருவர் இருப்பதை பார்த்த எம்ஜிஆரும் ஆச்சரியம். எப்படியோ படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டு போய்விட்டார் எம்ஜிஆர். அதன் பின் பிரிவியூ ஷோவை பார்க்க கலைஞர் எம்ஜிஆரை அழைக்க படம் பார்க்க வந்தார் எம்ஜிஆர். படத்தை பார்த்த எம்ஜிஆருக்கு ஏசியிலும் ஒரு மாதிரி உடம்பு வெட வெடத்து போயிருக்கிறது. தன்னை போன்றே இருக்கிறானே? தன்னைப் போன்றே நடிக்கிறானே என்று பயம் ஒருபக்கம்.
வாழ்த்துக்களை சொல்ல எம்ஜிஆர் மேடையில் ஏறி பேசும்போது ‘மு.க.முத்துவின் நடிப்பை பார்த்தேன். மிக அற்புதம். ஆனால் அவருக்கு ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். அவரவருக்கு ஒரு பாணி இருக்கும். அதே போல் மு.க.முத்து அவரது பாணியில் நடித்தால் தான் நன்றாக இருக்கும் ’ என்று கூறி விட்டு கிளம்பி விட்டார். அதே மாதிரி ஒரு சில படங்களில் நடித்த மு.க.முத்து அதன் பின் படங்களில் நடிக்கவே இல்லை. இந்த செய்தியை பட்டிமன்ற பேச்சாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி கூறினார்.