50 பேருடன் படப்பிடிப்பில் நுழைந்த எம்.ஜி.ஆர்... பதறிப்போன சிவாஜி!.. நடந்தது இதுதான்!..
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் எம்.ஜி.ஆருக்கு எப்படி ரசிகர்கள் இருந்தார்களோ அதுபோலவே சிவாஜிக்கும் ரசிகர்கள் இருந்தனர். சிவாஜி ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது. அதுபோலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு சிவாஜியை பிடிக்காது. எப்படி ரஜினி - கமல் மற்றும் விஜய் - அஜித் ரசிகர்கள் இப்போது இருக்கிறார்களோ அப்போதும் அப்படித்தான் இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வந்தனர். எம்.ஜி.ஆரை சிவாஜி எப்போதும் ‘அண்ணே’ என பாசமாக அழைப்பார். அதேபோல் சிவாஜியே சிறந்த நடிகர் என பல மேடைகளில் எம்.ஜி.ஆர் பேசியுள்ளார்.
ஒருமுறை சென்னை பரணி ஸ்டுடியோவில் சிவாஜியின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இயக்குனர் ஸ்ரீதர் அப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எம்.ஜி.ஆர் சுமார் 50 பேருடன் படப்பிடிப்பு இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். இதை பார்த்ததும் எம்.ஜி.ஆர் ஏன் இத்தனை பேரோடு வருகிறார் என சிவாஜியும், ஸ்ரீதரும் பதறி போய் எழுந்து நின்றனர்.
அருகில் வந்த எம்.ஜி.ஆரிடம் சிவாஜி ‘அண்ணே என்னாச்சி இத்தனை பேரோடு என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ என பதட்டத்துடன் கேட்க அதற்கு எம்.ஜி.ஆர் ‘இவர்களெல்லாம் உன்னுடய ரசிகர்கள். காலையில் நான் இந்த பக்கம் செல்லும் போது பார்த்த போது வெளியே நின்று கொண்டிருந்தார்கள். இப்போது திரும்பி வரும்போது அப்படியே நின்று கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை உள்ளே அழைந்து உன்னை பார்க்க வைத்தேன்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
அதன்பின் அந்த ரசிகர்களிடம் பேசி, அவர்களுடன் புகைப்படமெல்லாம் எடுத்துவிட்டு அவர்களை அனுப்பிய சிவாஜி ஸ்ரீதரிடம் ‘ இன்று முதல் இந்த ரசிகர்களில் பாதி பேர் எம்.ஜி.ஆரின் ரசிகர்களாக மாறிவிடுவார்கள்’ என சொல்லி சிரித்தாராம்.
இதையும் படிங்க: எங்க கண்ட்ரோல்ல கை வைக்காத செல்லம்!.. வழுவழு உடம்பை காட்டும் ஹனி ரோஸ்…