Connect with us
mgr

Cinema History

எம்.ஜி.ஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. காலில் விழுந்து கதறிய அசோகன்…

எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம் இருந்தது. தயாரிப்பாளர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார். அவர்களை முதலாளி என்றுதான் அழைப்பார். ‘வணக்கம் முதலாளி.. வாங்க முதலாளி’ என்றே கூப்பிடுவார். குறிப்பாக ஏவி மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டியார், எஸ்.எஸ்.வாசன், சின்னப்ப தேவர் ஆகியோரை படப்பிடிப்பு தளம் மட்டுமில்லாமல் பொது இடங்களிலும் அவர்களை முதலாளி என்றே அழைப்பார். அதை பார்ப்பவர்கள் ‘எம்.ஜி.ஆரே அவர்களை முதலாளி என அழைக்கிறாரே’ என வியப்பாக பார்ப்பார்கள்.

asokan
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் பல படங்களில் நடித்தவர் அசோகன், கதாநாயகனாகவும், இரண்டாவது கதாநாயகனாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களிலும் அவரின் நண்பராகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். எனவே, எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகியவர் அவர். அசோகரின் காதல் திருமணத்தை கூட பல எதிர்ப்புகளை தாண்டி எம்.ஜி.ஆரே நடத்தி வைத்தார்.

mgr asokan

அசோகன் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். அதில், எம்.ஜி.ஆர் நடித்த ‘நேற்று இன்று நாளை’ படமும் ஒன்று. ஒருநாள் படப்பிடிப்புக்கு அசோகன் வந்தபோது அவரை ‘வாங்க முதலாளி.. வணக்கம்’ என எம்.ஜி.ஆர் வரவேற்றார். அசோகன் உடனே அவரின் காலை பிடித்துக்கொண்டு ‘நீங்கள் என்னை முதலாளி என அழைப்பதா?.. கூடாது. இனிமேல் என்னை முதலாளி என அழைக்கமாட்டேன் என சொன்னால்தான் உங்கள் காலை விடுவேன்’ என சொல்லியிருக்கிறார்.

mgr

எம்.ஜி.ஆர் அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்துவிட்டு ‘அட மண்டு. நான் சம்பளம் வாங்கி படத்தில் நடிப்பவன். நீ எனக்கு சம்பளம் கொடுப்பவன். உன்னை முதலாளி என அழைப்பதில் என்ன தவறு இருகிறது. நான் எவ்வளவு புகழ் பெற்றாலும் உனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துதான் ஆக வேண்டும். நான் மட்டுமல்ல. இந்த படத்தில் வேலை செய்யும் எல்லோரும் உன்னை அப்படித்தான் அழைக்க வேண்டும்’ என சொல்ல அசோகன் கண்கலங்கி விட்டாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top