Vaali MGR : தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற கவிஞர்களாக இருந்தவர்கள் கவிஞர் வாலி மற்றும் கண்ணதாசன். கவிதையோடு இலக்கியத்தையும் சேர்த்து எழுதுவதில் வல்லவர் கண்ணதாசன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பலரும் பல பாடல்களை எழுதியிருந்தாலும் கண்ணதாசனும் வாலியும் சேர்ந்துதான் அதிக பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
எம்.எஸ்.வியின் இசையில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பல பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அந்த வகையில் எம்ஜிஆருக்கு மிக நெருக்கமாகவும் மாறினார். அந்த நெருக்கம் தான் எம்ஜிஆர் தன்னுடைய கட்சியில் வாலியை இணைத்துக் கொள்ள நினைத்தார். ஆனால் வாலி அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அதற்கு முக்கிய காரணமே கண்ணதாசன்தானாம்.
இதையும் படிங்க: இவரா இப்புடி… தன்னை விட நல்லா நடித்த நடிகரை அசிங்கப்படுத்திய தம்பி ராமையா…
ஒரு சமயம் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி மூவரும் சிங்கப்பூருக்கு ஒரு கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்கள். அப்போது மாலை வேளையில் மூவரும் மது அருந்தி பேசிக் கொண்டிருக்க வாலிக்கு கண்ணதாசன் மூன்று கட்டளைகளை பிறப்பித்தாராம். முதலாவதாக ஒன்று இருக்க ஒன்றை நாடாதே என்று கூறினாராம்.
இரண்டாவதாக சொந்தப்படம் எடுக்காதே. மூன்றாவதாக எந்த அரசியல் கட்சியிலும் சேராதே. இந்த மூன்று கட்டளைகளையும் வாலிக்கு பிறப்பித்திருக்கிறார் கண்ணதாசன். கண்ணதாசன் சொன்ன மூன்று கட்டளைகளையும் அப்படியே ஏற்று தன் வாழ்க்கையில் செயல்பட்டவர்தான் வாலி. இதனால்தான் எம்ஜிஆர் அதிமுகவில் சேர அழைத்தும் வாலி மறுத்துவிட்டதாக சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க: கண்ணதாசனை ஏற்க மறுத்த வாலி!.. முதலமைச்சர் நானா? நீங்களா?!.. எகிறிய எம்.ஜி.ஆர்!..
இருந்தாலும் எம்ஜிஆருக்காக பல பாடல்களை அதுவும் அரசியல் ரீதியாக எழுதியதில் வாலிக்குத்தான் பெரும்பங்கு உண்டு. அதே சமயம் சிவாஜிக்காக எழுதிய வாலி பாடல்கள் என்றென்றும் சாகா வரம் பெற்றவை. ஒரு ஊடகத்தில் பேசிய வாலி ‘சிவாஜிக்காக எத்தனையோ பாடல்களை நான் எழுதியிருந்தாலும் அழகு தெய்வம் மெல்ல மெல்ல என்ற பாடல்தான் சிவாஜிக்கும் பிடித்த பாடல்’ என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…