Connect with us
chandrababu

Cinema History

நடிகரை சரக்கடிக்க வச்சி மாட்டிவிட்ட சந்திரபாபு!.. கடுப்பான எம்ஜிஆர்.. படப்பிடிப்பில் நடந்த களேபரம்..

Chandrababu: தமிழ் சினிமாவில் தனது காமெடிகளின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் சந்திரபாபு. இவர் காமெடிகள் மட்டுமல்லாமல் ஆடல், பாடல், திரைப்பட இயக்கம் என பல திறமைகளை கொண்டிருந்தார். இவரின் காமெடிகள் அந்த கால மக்களை பெரிதும் கவர்ந்தது.

இவர் தமிழில் தன அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் சபாஷ் மீனா, பதி பக்தி, பாத காணிக்கை போன்ற பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார். மேலும் பெண், ஆண்டவன் கட்டளை போன்ற பல திரைப்படங்களில் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் பாடல்கள் அனைத்தும் மக்களை பெரிதளவில் கவர்ந்தன.

இதையும் வாசிங்க:சிவாஜி அப்படி சொன்னதை மறக்கவே மாட்டேன்!. யார் அப்படி சொல்லுவா?!. உருகிய தேங்காய் சீனிவாசன்.

இவர் சற்று ஆணவம் உடையவரும் கூட. தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை மரியாதையுடன் நடத்த மாட்டாராம். மேலும் இவர் தனது வாயாலேயே கெட்டவரும் கூட. எம்ஜிஆரை கூட ஒரு முறை பகைத்து கொண்டார். ஆனால் எம்ஜிஆரோ அதை மனதில் வைத்து கொள்ளாமல் தொடர்ந்து சந்திரபாபுவுக்கு பட வாய்ப்புகளை அமைத்து கொடுத்தார்.

ஆரம்பத்தில் சந்திரபாபு சினிமா வாய்ப்பு தேடி அலைந்த போது எம்ஜிஆர்தான் இவருக்கு பட வாய்ப்பை வாங்கி கொடுத்தார். சந்திரபாபு பொதுவாக குறும்புதனம் அதிகமாய் கொண்டவரும் கூட. இதற்கு இவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே ஒரு உதாரணம். எம்ஜிஆருக்கு பொதுவாக படபிடிப்புக்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு வருவது பிடிக்காது.

இதையும் வாசிங்க:நிச்சயம் முடிந்த பெண்ணிடம் ஏடாகூடமா பேசிய சந்திரபாபு… மானத்தை வாங்கிய பெண்ணின் தந்தை…

ஆனால் சந்திரபாபு மது அருந்தக்கூடியவர். அப்போது படபிடிப்பிற்கு மனோகரும் சந்திரபாபுவும் வந்துள்ளனர். அப்போது திடீரென எவரோ வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அனைவரும் சந்திரபாபுதான் குடித்துவிட்டு வாந்தி எடுக்கிறார் என நினைத்துள்ளனர். ஆனால் அங்கு வாந்தி எடுத்தது மனோகராம்.

மனோகர் பொதுவாக எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். ஆனால் சந்திரபாபு தனது குறும்புதனத்தால் மனோகரை குடிக்க வைத்துள்ளார். ஆனால் கடைசியில் மனோகர் மாட்டிக்கொள்ள எம்ஜிஆர் அந்த நாளின் படபிடிப்பை நிறுத்திவிட்டாராம். இப்படி படபிடிப்பில் எம்ஜிஆரிடமே தனது குறும்புதனத்தை காட்டியுள்ளார் சந்திரபாபு.

இதையும் வாசிங்க:எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…

google news
Continue Reading

More in Cinema History

To Top