Cinema History
கூடவே இருந்து முதுகில் குத்திய அசோகன்! நிஜத்திலும் வில்லனாகவே இருந்திருக்காருப்பா..
தமிழ் திரையுலகில் சிறந்த வில்லன்களில் அறியப்பட்டவர் நடிகர் அசோகன். சிறுவயது முதலே பல நாடக மேடைகளில் ஏறி இறங்கியவர் அசோகன். அதுமட்டுமில்லாமல் பேச்சுப்போட்டி, நாடகப்போட்டி என அனைத்திலும் அப்பவே தன்னை ஈடுபடுத்திக் கொண்டாராம். இளங்கலை பட்டம் பெற்ற அசோகன் தமிழை அழகாக உச்சரித்துப் பேசுவதில் வல்லவர்.
அதிலும் கண்ணதாசன் கதை எழுதிய படங்களில் தமிழை அவ்வளவு அற்புதமாக பேசி நடித்திருக்கிறார். வில்லனாக நடித்ததை விட சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தார் அசோகன். உயர்ந்த உள்ளம் திரைப்படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கினார். அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியே இவருடன் முடியும் மாதிரிதான் அமைந்திருக்கும்.
அதில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சினிமாவில் பழம்பெரும் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவினால் தான் அசோகன் அறிமுகமானார். ஆண்டனி என்ற பெயரை அசோகன் என மாற்றியதே ராமண்ணாதானாம். முதன் முதலில் ஔவையார் படத்தில் தான் அறிமுகமானார் அசோகன்.
அதனை அடுத்து கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஆஷ்துரை வேடமேற்று தமிழ் திரையுலகில் படிப்படியாக வளரத்தொடங்கினார். இவரின் வளர்ச்சியை பார்த்த எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் அசோகனை இணைத்துக் கொண்டார். அதன் விளைவாக எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் அசோகன் தோன்ற ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் அசோகனை தன்னுடைய வலதுகரமாகவே பயன்படுத்திக் கொண்டாராம். அதுமட்டுமில்லாமல் அசோகனுடன் சேர்ந்து நடிகர் தேங்காய் சீனிவாசனையும் தன்னுடன் இணைத்துக் கொண்டாராம். மேலும் எம்ஜிஆர் அரசியலிலும் அசோகனை இழுக்க எத்தனை முறையோ முயற்சி செய்தாராம். தன்னுடன் அரசியலிலும் கூடவே இருக்க வேண்டும் என கூறினாராம்.
ஆனால் அசோகன் போக மறுத்துவிட்டாராம். ஏனெனில் ஒரு தமிழன் இல்லாத ஒருவரை எப்படி தலைவனாக்க முடியும்? என்ற எண்ணத்தில் அசோகன் எம்ஜிஆருடன் சேர மறுத்துவிட்டாராம். பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜிடம் தான் அசோகன் சொன்னாராம். ‘ நீயும் சேலத்துக்காரன், நானும் சேலத்துக்காரன். இருவரும் காவேரி நீரைக் குடித்து வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும் போது நமக்கு தலைவனாக இருக்க ஒரு தமிழன் தான் வரவேண்டும்’ என அசோகன் கூறினாராம். இதை காந்தராஜ் ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : கதாநாயகியின் குளியல் காட்சி!.. கண்டுக்காம விட்ட சென்சார் போர்டு!.. அப்பவே அந்த மாதிரி!…