Connect with us

Cinema History

சிவாஜியின் 200வது படம்!… கணக்கு தெரியாமல் முழித்த சிவாஜியை அதிர வைத்த எம்.ஜி.ஆர்…

Sivaji vs MGR: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்துக்கு இரண்டு நடிகர்கள் எதிரிகளாக சித்தரிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு இடையே கண்டிப்பாக ஒரு நல்ல நட்பு இருக்கும். அப்படி தான் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுக்கும் இடையே இருந்த உறவு. அதனை நிரூபிக்க ஒரு விஷயமும் நடந்து இருக்கிறதாம்.

பொதுவாக தன்னுடைய எதிரி நடிகர் வெல்வதை இன்னொரு நடிகர் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் கண்டிப்பாக இதுக்கு நேர்மாறானவர் தான். சிவாஜி கணேசனின் 200வது படம் செய்த சாதனையை அவருக்கே புள்ளிவிவரமாக எடுத்து சொல்லி அசர வைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: இளையராஜா அந்த இடத்துல வாத்தியாரு மாதிரி… மகன் -மகள்னுலாம் பார்க்க மாட்டாரு…

சிவாஜி கணேசனின் நடிப்பில் உருவானது திரிசூலம். 1979ம் ஆண்டு ரிலீஸான இப்படத்தினை கே.விஜயன் இயக்கி இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க கே.ஆர்.விஜயா, ஸ்ரீபிரியா, நம்பியார் உள்ளிட்ட சிலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இப்படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை முறியடித்தது.

இந்நிலையில் நடிகர் சங்க விழாவுக்கு அழைக்க அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க செல்கிறார் சிவாஜி கணேசன். அப்போது இருவரும் பேசிக்கொண்டு இருக்க ‘என்னப்பா உன் 200வது திரைப்படம் எப்படி ஒடுது?’ எனக் கேட்கிறார் எம்.ஜி.ஆர். சிவாஜியோ ‘எதோ போகுதுனு சொல்றாங்கண்ணே’ என்கிறார். உண்மையிலேயே அவருக்கும் அப்படத்தின் சரியான நிலவரம் தெரியாதாம்.

ஒரு நிமிஷம் அவரை பார்த்த எம்.ஜி.ஆர் இண்டர்காமில் ஒருவர்ரை கூப்பிடுகிறார். உடனே அவர் அறைக்கு ஒரு ஃபைல் வருகிறது. அதை எடுத்து சிவாஜியிடம் கொடுத்து வணிக வரித்துறை ரிப்போட் உன் 200வது படத்தின் உடையது தான். உன் படம் எந்தெந்த ஊரிலே எவ்வளவு நாள் ஓடியிருக்கு எவ்வளவு வசூல் கிடைத்து இருக்கு என்ற தகவல் இருக்கிறது.

இதையும் படிங்க: இதுக்கு பேரு புரமோஷனா?!.. பச்சோந்தி வேஷம் போடாதீங்க!.. சந்தானத்தை பொளக்கும் பிரபலம்..

இதுவரைக்கும் தமிழ் சினிமா மூலம் இவ்வளவு நாளிலே இத்தனை பெரிய வருமானம் வேற எந்த படத்திற்கும் வந்ததில்லைன்னு எனக்கு இந்த தகவலை அனுப்பி இருக்காங்க’ என்றாராம். சிவாஜிக்கே இது ஆச்சரியமான தகவலாக தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top