எம்ஜிஆரையே கதறவிட்ட தயாரிப்பாளர்! ஓடிவந்த சின்னவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் 1936இல் சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் எம்ஜிஆர். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்த எம்ஜிஆருக்கு அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளியாகும் வரை எந்தப் புகழும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றார் எம் ஜி ஆர்.
குருவாக ஏற்றவர்
நடிகர் என் எஸ் கிருஷ்ணன் அவரை தன் குருவாகவே பாவித்தார். அவருடைய கொள்கைகளை இவரும் பின்பற்றி வந்தார் .மற்றவர்களுக்கு உதவுவது யாருக்கேனும் துன்பம் ஏற்பட்டால் முதல் ஆளாக போய் அந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைப்பது என ஒரு அற்புத மனிதராகவே சினிமாவில் பலம் வந்தார் எம்.ஜி.ஆர்.
நடிப்பில் மட்டுமில்லாமல் அரசியலிலும் ஒரு நல்ல தலைவராகவே காணப்பட்டார். அதுவும் எம் ஆர் ராதாவினால் சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு மக்கள் எம்.ஜி.ஆர்- ஐ மிகவும் கொண்டாடினார்கள். அந்த சம்பவத்திற்குப் பிறகு முதன்முதலாக வெளிவந்த படம் காவல்காரன். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாகவும் சினிமாவில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.
படத்தில் எழுந்த சிக்கல்
இவரது நடிப்பில் வெளியான கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். மேலும் தன்னுடைய சொந்த தயாரிப்பில் நாடோடி மன்னன் ,அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை தயாரித்தார் .அவர் தயாரித்த மூன்று படங்களுமே நல்ல வசூலையும் மாபெரும் வெற்றியும் பதிவு செய்தது. இந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் பானுமதி நடிப்பில் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
அந்தப் படப்பிடிப்பு நேரத்தில் எம்ஜிஆர் ஒழுங்காக கால்ஷீட் கொடுக்கவில்லையாம். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி நெருங்க அந்த நேரத்தில் எம்ஜிஆரால் வர முடியாமல் போய்விட்டதாம் .அந்தப் படத்தை தயாரித்த மாடர்ன் தியேட்டர் அதிபரான டி ஆர் சுந்தரம் வெகு நாட்கள் காத்திருந்தும் எம்ஜிஆர் வருகிற மாதிரி தெரியவில்லையாம். உடனே அந்த நிறுவனம் சார்பாக நடித்துக் கொண்டு இருந்த நடிகரான கரடிமுத்து தான் எம்ஜிஆருக்கு பதிலாக நடித்தாராம். அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் வில்லனாக நடித்த வீரப்பனுக்கும் ஏதோ காலில் விபத்து ஏற்பட அவராலும் நடிக்க முடியவில்லையாம். அவருடைய கதாபாத்திரத்தையும் ஏற்று கரடி முத்துவே நடித்திருக்கிறார்.
தில்லுமுல்லு வேலை பார்த்த டி.ஆர்.எஸ்
அப்போது லாங் ஷாட்டில் எடுத்து அந்த படத்தை முடித்து இருக்கிறார்கள். கிலோசப் மட்டும் எம்ஜிஆர் வீரப்பன் முகத்தை வைத்து எடுத்து விட்டார்களாம். படமும் சென்சார் வரைக்கும் போய் வந்திருக்கிறது. அதன் பிறகு எம்ஜிஆர் சேலத்திற்கு வந்து டி.ஆர் சுந்தரத்திடம் வாங்க படத்தை முடித்து விடலாம் என்று சொல்ல அதற்கு டி.ஆர் சுந்தரம் படம் எடுத்து முடித்தாகிவிட்டது. வேண்டுமென்றால் வந்து பாருங்கள் என்று சொல்லி படத்தை போட்டு காட்டினாராம். படத்தை பார்த்ததும் எம்ஜிஆருக்கு அதிர்ச்சியாகி விட்டதாம்.
அதன் பிறகு தான் டி ஆர் சுந்தரத்தை பார்த்தே கொஞ்சம் நடுங்க ஆரம்பித்தாராம் எம்ஜிஆர். மேலும் அந்த சம்பவத்திற்கு பிறகு டி ஆர் சுந்தரத்திடமிருந்து விலகிய இருந்தாராம் எம்ஜிஆர். இந்த ஒரு சுவாரசிய தகவலை அரசியல் விமர்சகர் காந்தராஜ் ஒரு பேட்டியில் கூறினார்.