நட்புக்கு மரியாதை செய்த எம்ஜிஆர்!.. நண்பரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற சம்பவம்!.
1940களில் ஒரு நடிகர் தன் சினிமா பயணத்தை தொடங்கி சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். யாருமே அறிந்திருக்கமாட்டார்கள் பின்னாளில் அவர் தான் இந்த தமிழகத்தையே ஆளப்போகிறார் என்று. நாடக மேடையில்
தனது வாழ்க்கையை தொடங்கி சினிமாத்துறையில் நடிக்க வந்தார்.
ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தார் எம்ஜிஆர். சதிலீலாவதி படத்தின் மூலம் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் ஹீரோவாக தலைவராக பொன்மனச்செம்மலாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். அவரால் பலனடைந்தவர் பலபேர். ஏழை மக்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராக விளங்கினார்.
அவரை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த சின்னப்பா தேவர் ஆரம்பகாலங்களில் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராக இருந்தார். எம்ஜிஆரின் உதவியால் தான் சின்னப்பா தேவரை ஒரு பெரிய தயாரிப்பாளராக உயர்த்திக் காட்டியது. சாலி வாஹனன் படத்தில் எம்ஜிஆர் விக்ரமாதித்தன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தின் ஹீரோவே என்.எஸ்.கிருஷ்ணன் தான். மேலும் பாலையாவும் உடன் நடித்திருப்பார்.
அந்த படத்தின் ஒரு சண்டைக் காட்சியில் எம்ஜிஆருடன் சண்டை போட ஈடுகொடுக்க முடியாத படத்தின் நாயகன் இயக்குனரிடம் எம்ஜிஆரின் சில காட்சிகளை எடுக்க சொல்லியிருக்கிறார். அதனால் மனமுடைந்த எம்ஜிஆர் கூட இருந்த ஸ்டண்ட் நடிகரான சின்னப்பா தேவரிடம் புலம்பிர்யிருக்கிறார். அதற்கு தேவர் ‘கவலைப்படாதே, உன் திறமை உன்னை எங்கேயோ கொண்டு போகும்’ என ஆறுதல் கூறியிருக்கிறார்.
அதை தொடர்ந்து ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக நடித்தார் எம்ஜிஆர். அந்த படத்தில் தேவருக்கும் வாய்ப்பும் வாங்கி கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த எம்ஜிஆர் தேவரை ஒரு தயாரிப்பாளராகவும் உருவாக்கியிருக்கிறார். தேவரின் தயாரிப்பில் வெளியான முதல் படமே எம்ஜிஆர் நடித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படம் தான். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதன் பிறகு எம்ஜிஆரை வைத்து கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வெற்றி கொடி நாட்டியது. தன் நண்பருக்காக எம்ஜிஆரின் உதவி என்றும் பாராட்டக்குரியதாக இருக்கிறது.