நடிகைகளுக்கு அக்ரிமெண்ட் போட்ட எம்ஜிஆர்!.. அதை மீறிய நடிகை யார் தெரியுமா?..

Published on: December 14, 2022
mgr_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகராக லட்சிய நடிகராக திகழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவரின் காலத்தில் ஒரு புரட்சி நடிகராகவே வலம் வந்தார். அது மட்டுமில்லாமல் வசூல் சக்கரவர்த்தியாகவே விளங்கினார்.

mgr1_cine
mgr saroja devi

தொட்டதெல்லாம் ஹிட் என்பதற்கிணங்க நடித்த பெரும்பாலான படங்கள் வசூலை வாரி இறைத்தன. இவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகளில் அதிக முறை ஜோடியாக நடித்த நடிகைகள் சரோஜா தேவி மற்றும் ஜெயலலிதா. அதனாலேயே எம்ஜிஆருக்கு விருப்பமான நடிகைகளாகவே அவர்கள் திகழ்ந்தனர்.

இதையும் படிங்க : விஜயின் லேடி கெட்டப் ரகசியம்!.. ‘பிரியமானவளே’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த ருசிகர சம்பவம்!..

இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நடிகை லதா. உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் மூலம் எம்ஜிஆருக்கு முதன் முதலில் ஜோடி ஆனார் லதா. அந்த படத்தில் இவருடன் நடித்த மற்ற நடிகைகளான மஞ்சுளா, சந்திரலேகா போன்றோரை அறிமுகம் செய்ததும் எம்ஜிஆர் தானாம். லதாவை சினிமாவில் அறிமுகம் செய்ததும் எம்ஜிஆர் தான்.

mgr2_cine
mgr jayalalitha

லதாவை சினிமாவில் நடிக்க வைப்பதற்கு முன் அவரிடம் அக்ரிமெண்ட் கேட்டாராம் எம்ஜிஆர். அதாவது அவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகள் ஒரு நேரத்தில் பிரபலமானதும் வேற வேற படங்களில் நடிக்க போய்விடுகின்றனர். அதன் பின் அவர்களுக்காக நான் என் படத்திற்காக காக்க வேண்டியிருக்கிறது. அதனால் ஐந்து வருடம் காண்டிராக்ட் அடிப்படையில் லதாவிடம் பேப்பரை காட்டி கையெழுத்து வாங்கினாராம் எம்ஜிஆர்.

இதே போல் தான் மஞ்சுளாவிடமும் ஐந்து வருடம் அடிப்படையில் கையெழுத்து வாங்கினாராம். ஆனால் அது மஞ்சுளாவின் அம்மா போட்ட கையெழுத்தாம். ஒரு நேரத்தில் மஞ்சுளா மேஜர் ஆனதும் நான் வேற படங்களில் நடிக்க போகிறேன், என் அம்மா போட்ட கையெழுத்திற்கெல்லாம் என்னால் காரணம் சொல்ல முடியாது என்று வேற படங்களில் நடிக்க போய்விட்டாராம்.

mgr3_cine
mgr manjula

ஆனால் லதா மட்டுமே கடைசிவரை எம்ஜிஆர் சொல் படி கேட்டு நடந்து கொண்டாராம். அந்த காண்டிராக்ட் முடியும் வரை எம்ஜிஆர் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்திருக்கிறார். இதை லதாவே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.