கல்யாணத்துக்கு கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்.. ஆனா கொஞ்ச நேரத்துல காத்துல பறந்துப்போச்சு.. ஏன் தெரியுமா?..

MGR
எம்.ஜி.ஆர் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். அப்போது ஒரு நாள் தனது தாயாரிடம் இருந்து எம்.ஜி.ஆருக்கு சீக்கிரம் ஊருக்கு வரும்படி ஒரு கடிதம் வந்தது.
உடனே எம்.ஜி.ஆர் தனது தாயாரை பார்க்க தனது சொந்த ஊருக்கு கிளம்பினார். ஆனால் அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது, தனக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது என்று.
இப்படி சொல்லாமல் கொள்ளாமல் தனக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்களே என கொதித்துப்போனார் எம்.ஜி.ஆர். “என்ன வயசாயிடுச்சு எனக்கு? இப்போ எனக்கு 22 வயசுதான் ஆகுது. நான் இன்னும் சினிமால பெரியாளாக ஆகல. அப்படி இருக்கும்போது கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” என தனது தாயாரிடம் சண்டை போட்டார்.

MGR
அதற்கு தாயார் “அந்த பொண்ணு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால் உனக்கு கட்டி வைக்கலாம்ன்னு நினைச்சேன். நீ போய் பொண்ணை பாரு. உனக்கு பிடிச்சிருந்தா கட்டிக்கோ. இல்லைன்னா நீ பாட்டுக்கு ஊருக்கு கிளம்பி போய்டு. உன்னை யார் தடுத்தா?” என கூறினாராம்.
இதனை கேட்ட எம்.ஜி.ஆர் எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்தலாம் என யோசித்தார். அதன் பின் ஒரு கண்டிஷன் போட்டார். “நீ சொல்றபடியே இந்த கல்யாணத்தை நான் பண்ணிக்கிறதா இருந்தாலும், நான் கதர் ஆடையை போட்டுக்கிட்டுத்தான் கல்யாணம் முடிப்பேன். இல்லைன்னா நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்” என கூறினாராம்.
தாயாரை பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு கல்யாணம் ஆனால் போதும் என்று நினைத்திருந்ததால், எம்.ஜி.ஆர் கூறிய கண்டிஷனுக்கு எந்த யோசனையும் இல்லாமல் சரி என்று கூறினாராம்.
இதையும் படிங்க: இரட்டை வேடத்தின் மேல் எம்.ஜி.ஆருக்கு இவ்வளவு வெறியா?? ஃப்ளாப் ஆன படத்தை ஹிட் அடிக்க வைத்த புரட்சித் தலைவர்…

MGR
அதன் பின் கல்யாண வீட்டுக்கு போனதும் கல்யாணப் பெண்ணான பார்கவியை பார்த்தார் எம்.ஜி.ஆர். பார்கவியின் அழகு அவரை கவிழ்த்துப்போட்டுவிட்டது என்றுதான் கூறவேண்டும். அந்த அளவுக்கு தனது கொள்ளை அழகால் எம்.ஜி.ஆரின் மனதை கொள்ளைக் கொண்டுவிட்டார் பார்கவி. அந்த பெண்ணை பார்த்தவுடன் இந்த கல்யாணத்தை தடுக்க வேண்டும் என்று அவர் நினைக்கவே இல்லையாம். ஆனால் துர்திஷ்டவசமாக சில ஆண்டுகளிலேயே பார்கவி உடல் நலம் மோசமானதின் காரணமாக உயிரிழந்துவிட்டார்.