Connect with us
mgr sivaji

Cinema History

சிவாஜி பட இயக்குனரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!. அதுவும் நடக்காம போச்சே!..

Mgr Bheemsingh: 50,60களில் தமிழ் திரையுலகில் ஒரு பழக்கம் இருந்தது. எம்.ஜி.ஆரை வைத்து தொடர்ந்து படமெடுக்கும் இயக்குனர்கள் சிவாஜியை வைத்து படமெடுக்க போக மாட்டார்கள். அதேபோல், சிவாஜியை வைத்து தொடர்ந்து படமெடுக்கும் இயக்குனர்கள் எம்.ஜி.ஆர் பக்கம் போகவே மாட்டார்கள். அதேபோல், எம்.ஜி.ஆரை வைத்து படமெடுக்கும் சினிமா நிறுவனம் சிவாஜி பக்கம் போக மாட்டார்கள்.

உதாரணத்திற்கு எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்களை எடுத்த சின்னப்ப தேவர் சிவாஜியை வைத்து ஒரு படம் கூட தயாரித்தது இல்லை. அதேநேரம், சில சமயம் சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஒரு படம் எடுத்தார். அதேபோல், சிவாஜியை வைத்து ஆலயமணி போன்ற படங்களை இயக்கிய கே.சங்கர் எம்.ஜி.ஆரை வைத்து சில படங்களை இயக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜியும் விஜயகாந்தும் இணைந்து நடித்த ஒரே படம்! 34 ஆண்டுகள் ஆகியும் மனதில் நிற்க காரணமே இதுதான்!

சிவாஜியை வைத்து படிக்காத மேதை, பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், பச்சை விளக்கு, சாந்தி என பல படங்களை இயக்கியவர் பீம்சிங். இவர் சிவாஜி படத்தை இயக்கியதால்தான் எம்.ஜி.ஆர் படத்தையே இயக்கவில்லை என திரையுலகில் பலரும் நினைப்பார்கள்.

bheemsingh

ஆனால், அதில் உண்மையில்லை. பி.யூ.சின்னப்பா ஹீரோவாக நடித்த திரைப்படம் ரத்னகுமார். இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இந்த படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தவர்தான் பீம்சிங். அந்த படம் உருவானபோது சிவாஜியுடன் மிகவும் பாசத்துடனும், பரிவுடனும் பேசுவாராம் பீம்சிங். அப்போதே அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.

இதையும் படிங்க: இரண்டு நடிகர்கள் நடித்து தூக்கப்பட்டு 3வதாக சிவாஜி நடித்த படம்!.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் இதுதான்..

பீம்சிங் சிவாஜியை வைத்து பதிபக்தி எனும் படத்தை துவங்கியபோது அந்த படத்தின் தொடக்க விழாவில் ஓடி ஆடி எல்லா வேலைகளையும் செய்தவர் எம்.ஜி.ஆர்தான். இப்படி அவர்களுக்குள் நல்ல உறவு இருந்தது. ஒருகட்டத்தில் பீம்சிங்கின் இயக்கத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டார். அதற்கான வேலைகளும் நடந்தது.

ஆனால், எம்.ஜி.ஆர் அப்போது அரசியலில் பிஸியாக இருந்ததால் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்பதுதான் நிஜம். ஆனால், இதுபுரியாமல் பலரும் சிவாஜியுடன் கொண்டிருந்த நட்பு காரணமாகவே பீம்சிங் எம்.ஜி.ஆர் படத்தை இயக்கவில்லை என இப்போதும் திரையுலகில் சேர்ந்த சிலர் நினைப்பதுண்டு.

இதையும் படிங்க: இரட்டை வேடங்களில் அதிகம் ஜெயித்தது எம்ஜிஆரா? சிவாஜியா?.. ரிசல்ட் என்ன தெரியுமா?..

google news
Continue Reading

More in Cinema History

To Top