திடீரென எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட ஐடியா!.. ஒரே நாளில் உருவான சூப்பர் ஹிட் பாடல்!.. அட அந்த பாட்டா!..

by சிவா |
mgr
X

எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் மட்டுமில்லை. நல்ல கதையாசியரும் கூட. இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர். கேமரா கோணம் முதல் எடிட்டிங் வரை சினிமா அவருக்கு அத்துப்படி. இயக்குனர் வர தாமதமானால் அவரே கூட சில காட்சிகளை எடுத்துவிடுவார். அவர் தயாரித்து இயக்கிய படம்தான் ‘நாடோடி மன்னன்’.

30 வருட நாடக அனுபவம் எம்.ஜி.ஆருக்கு எல்லாவற்றையும் வேகமாக கற்றுக்கொள்ள உதவியது. அதன்பின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தையும் அவர் தயாரித்து இயக்கி நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே வசூலில் சக்கை போடு போட்ட படங்களாகும். கடைசியாக அவர் இயக்கிய திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இப்படம் 1978ம் வருடம் வெளியானது.

mgr

mgr

அதேபோல், ஒரு படத்திற்கு இசை, பாடல்கள் எப்படி வரவேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் தெளிவாக இருப்பார். அவர் நடிக்கும் படங்களில் பாடல்களுக்கான டியூன்களை அவர்தான் தேர்வு செய்வார். அவருக்கு திருப்தி வரும் வரை இசையமைப்பாளரை விடமாட்டார்.

பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்து 1965ம் வருடம் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்தது. எம்.ஜி.ஆர் மற்றும் அவருடன் அடிமைகளாக இருப்பவர்கள் மரம் வெட்டும் காட்சி அங்கு எடுக்கப்பட்டது. எப்போது ‘எத்தனை காலம் நாம் இப்படி அடிமையாக இருப்பது?. ஏன்? ஏன்?’ என அவர்கள் கேள்வி கேட்பார்கள். அதற்கு எம்.ஜி.ஆரும் பதில் சொல்வார்.

mgr

இந்த காட்சியில் ஒரு பாடல் வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த எம்.ஜி.ஆர் உடனே வாலியை தொடர்பு கொண்டு பாடல் எழுத சொல்லியிருக்கிறார். எம்.எஸ்.வி இசையில் டி.எம்.எஸ் ஹைபிட்ச்சில் அந்த பாடலை பிரமாதமாக பாடியிருந்தார். ஒரேநாளில் இந்த பாடல் முடிக்கப்பட்டு எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைக்கப்பட்டது அந்த. பாடல் எம்.ஜி.ஆருக்கும் மிகவும் பிடித்துப்போனது. உடனே இயக்குனர் பந்துலுவை அழைத்து அந்த பாடலை படத்தில் சேர்க்க சொன்னார்.

அப்படி உருவான பாடல்தான் ‘ஏன் என்ற கேள்வி.. கேட்காமல் வாழ்க்கையில்லை’. இப்போதும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் முனுமுனுக்கும் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இறந்துபோன மனைவி முகத்தை கூட பார்க்க முடியலயே!… எம்.ஜி.ஆர் வாழ்வில் இவ்வளவு சோகமா!..

Next Story