புரட்சித்தலைவர் எம்ஜிஆர் – ஒரு தலைசிறந்த நடிகராகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வந்தார். அரசியலையும் நடிப்பையும் தனது இரு கண்களாக பார்த்து வந்தார். நாடக மேடையில் இருந்து வெள்ளித்திரையில் ஒரு அற்புதமான நடிகராக மாறினார் எம்ஜிஆர். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செய்தார்.

கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு
அந்தப் பயணத்தில் ஒரு வெற்றியும் கண்டார் .அதனை அடுத்து அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 60களில் கலைஞருடன் சேர்ந்து அரசியலிலும் தன் பயணத்தை மேற்கொண்டார். ஏற்கனவே மக்கள் செல்வாக்கு அதிகம் கொண்ட எம்ஜிஆரால் திமுக கட்சிக்கு பெரும் ஆதரவும் கிடைத்தது. அதனால் 1967-ல் நடந்த தேர்தலில் கலைஞர் எம்ஜிஆர் இவர்களின் கூட்டணியில் அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் அண்ணாவிற்கு திடீர் உடல்நிலை மோசமடைந்ததால் ஒரு வருடமே அவர் முதலமைச்சராக இருந்தார். அதன் பிறகு புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார் .அதனால் திடீரென்று நெடுஞ்செழியனை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற நிலையில் அந்த கட்சி தள்ளப்பட்டது.
ஆனால் அப்போது மக்கள் செல்வாக்கு அதிகம் கொண்ட எம்ஜிஆர் கலைஞருக்கு ஆதரவாக கைகோர்த்ததால் மக்களும் கலைஞரை அந்தக் கட்சியின் முதலமைச்சராக ஆக்கியது. இப்படி எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் ஒரு ஆழமான நட்பு இருந்து கொண்டே வந்தது. ஆனால் இந்த நட்பை பிரிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியது. கலைஞர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் எம்ஜிஆரை வைத்து ஒரு படத்தை தயாரித்தார். அதன் பிறகு அவருடைய தயாரிப்பிலேயே தன் மூத்த மகனான மு.க.முத்துவை வைத்தும் பிள்ளையோ பிள்ளை என்ற படத்தை தயாரித்தார்.

எம்ஜிஆரிடம் சைதை கூறிய ரகசியம்
அந்தப் படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. மு .க.முத்து எம்ஜிஆரை மனதில் வைத்துக் கொண்டே வளர்ந்தவர். அதனால் அவருடைய பல குணாதிசயங்களை ஒட்டியே மு.க. முத்துவும் இருந்தார் .ஹேர் ஸ்டைலில் இருந்து உடை அணிவது வரை எந்த பாவனைனாலும் எம்ஜிஆரை ஒத்தே இருந்தன. அதை படத்திலும் பிரதிபலித்தார் மு .க.முத்து. இதனால் மு.க.முத்துவிற்கு ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் எம்ஜிஆரின் சில ரசிகர் மன்றங்கள் மு.க.முத்துவின் ரசிகர் மன்றங்களாக மாற்றப்பட்டன. இந்த செய்தியை சைதை துரைசாமி ஒரு சமயம் எம்ஜிஆர் இடம் போய் கூறினாராம்.
ஆனால் இதை உடனடியாக எம்ஜிஆர் நம்பாமல் தனக்கு வேண்டியவர்களை வைத்து அவர் சொன்னது உண்மையா என்று நோட்டம் பார்க்கச் சொன்னாராம். துரைசாமி சொன்னதைப் போலவே எம்ஜிஆரின் சில ரசிகர் மன்றங்கள் மு க முத்துவின் ரசிகர் மன்றங்களாக மாறி இருந்ததை எம்ஜிஆரின் கவனத்திற்கு வந்திருக்கிறது. அதன் பிறகும் எம்ஜிஆர் துரைச்சாமியை அழைத்து நீங்கள் சொன்னது உண்மைதான் என்றும் கூறினாராம் . அதன் பிறகே எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் இடையே சிறு விரிசல் ஏற்பட வழிவகுத்திருக்கிறதாம். இப்படி எம்ஜிஆர் எந்த விஷயத்திலும் உடனே நம்ப மாட்டாராம். எதையுமே ஒரு சந்தேக கண்ணுடன் தான் பார்ப்பாராம்.

கிரிமினல் மைண்ட்
அவரிடம் எப்பொழுதுமே ஒரு கிரிமினல் புத்தி இருந்து கொண்டே இருக்குமாம் .மேலும் எம்ஜிஆரின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்ததும் அந்த ஒரு கிரிமினல் புத்தி தான் என்று பத்திரிக்கையாளர் சுரா ஒரு பேட்டியில் கூறினார். மேலும் அவர் கூறும் போது சிவாஜி போல் எம்ஜிஆர் கிடையாது என்றும் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவர் சிவாஜி. ஆனால் எம்ஜிஆர் அப்படிப்பட்டவர் கிடையாது என்றும் அவர் மனதில் எப்பொழுதுமே ஒரு கிரிமினல் புத்தி இருக்கும் என்றும் இந்த சம்பவங்களை கூறி அந்த பேட்டியின் மூலம் தெரிவித்தார் சுரா.
இதையும் படிங்க : ‘இவர தெரியல!. இவர்தான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்’ – கருப்பு சுப்பையாவுக்கு மரணம் இப்படியா வரணும்?..
