அந்த பொண்ணு கூடலாம் ஆட மாட்டேன்!.. முரண்டு பிடித்த எம்.ஜி.ஆர்.. ஆனா நடந்தது வேறு!…

நடனமாடும் போது நடிகர் எம்.ஜி.ஆருக்கென ஒரு தனி பாணியை கடைபிடிப்பார். அதை வேறு எந்த நடிகரும் செய்ய முடியாது. நடனமாடும்போது தனக்கென ஒரு உடல் மொழியை எம்.ஜி.ஆர் கையாள்வார். தலையை ஆட்டியும், கையை மேலே தூக்கியும் அவர் நடனம் ஆடும் ஸ்டைல் தனி அழகுதான்.

எம்.ஜி.ஆர் மற்ற நடிகைகளுடன் நடனமாடும்போது கொஞ்சம் தயங்கி தயங்கி ஆடுவார். ஆனால், நடிகை ஜெயலலிதாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடுவார். இது எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் திரையில் எம்.ஜி.ஆருக்கு பலரும் ஜோடியாக நடித்தாலும் ஜெயலலிதா அவருக்கு நல்ல ஜோடியாக இருந்தார்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் குடியிருந்த கோவில். இப்படத்தில் ஒரு பாடலுக்கு எம்.ஜி.ஆருடன் சிறப்பாக நடனமாடும் விஜயலட்சுமியை நடனமாட வைப்பது என சங்கர் முடிவெடுத்தார். அந்த பாட்டில் பஞ்சாப் பங்கரா ஸ்டைல் நடனம் ஆகும். எனவே, பதறிப்போன எம்.ஜி.ஆர் ‘எப்பா அந்த பொண்ணு சிறப்பாக நடனமாடுவார்.. என்னால் அவருக்கு இணையாக நடனமாட முடியாது’ என மறுத்தார். ஆனால், சங்கர் விடாமல் வற்புறுத்த எம்.ஜி.ஆரோ ‘சரி. நான் ஒரு வாரம் பயிற்சி எடுக்கிறேன். நம்பிக்கை வந்தா அந்த பொண்ணு கூட ஆடுறேன்’ என்றாராம்.

ஒரு வார பயிற்சியில் எம்.ஜி.ஆர் ஆடியதை பார்த்து சங்கர் அசந்து போனார். எம்.ஜி.ஆருக்கும் நம்பிக்கை வந்தது. அப்படி உருவான பாடல்தான் ‘ஆடலுன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்’ ஆகும். இந்த பாடலில் எம்.ஜி.ஆர் மிகவும் துள்ளலாக நடனமாடியிருப்பார்.

இந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it